Main menu:

தமிழக அரசியலில் எனது தொடர் புத்தம் புது பூமி வேண்டும்

எனது புத்தகங்கள்

அகம் புறம் அந்தப்புரம்
முகலாயர்கள்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
செங்கிஸ்கான்

Site search

Recent Posts

Categories

நட்பு வட்டம்

Archives

site stats

RSS RSS

Archive for November, 2008

வீடுகள், மனைகள் விற்பனைக்கு

போட்-ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்
வழங்கும்
பெருமையான வாய்ப்பு!

சென்னையின் புறநகர்ப்பகுதிகளான வேளஏரியில் உதயமாகியிருக்கிறது  எங்களது குடைக்குள் மழை நகர். அங்கீகரிக்கப்பட்ட புறம்போக்கு  நிலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அருமையான வீடுகள்.

வீட்டின் அளவு 1100 ச.அ. (புயல் காலங்களில் எல்லைகள் கிடையாது.)
இரண்டு படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் (நவம்பரில் மட்டும்)
நல்ல நீரோட்டமுள்ள சாலைகள்
அம்சமான படகு பார்க்கிங்
வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள்.
குறிப்பிட்ட மாதங்களில் முட்டுக்காடுக்கு உல்லாசப் படகு சவாரி  உண்டு.
அருகிலேயே உயர்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி, மரு த்துவமனை மற்றும் வெள்ள நிவாரண முகாம்கள் [...]

ரீமிக்ஸ் பலன்கள்

கணிணியில் பழைய ஃபைல்களை எல்லாம் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது  இது கிடைத்தது. சில வருடங்களுக்கு முன் ‘சனிப்பெயர்ச்சி பலன்கள்’ என்று தினமணி  கதிருக்காக லொள்ளுத்தனமாக எழுதிய கட்டுரை. பலரும் எடுத்துக் கையாண்டதால், ஏற்கெனவே படித்திருக்கக்கூடும். இந்தவாரத்தில் ஏதோ சிஷ்யப் பெயர்ச்சியோ, குரு  பெயர்ச்சியோ நடக்கப்போகிறதாமே? பழைய கட்டுரையை ரீமிக்ஸ் செய்து ‘புதிய  பலன்கள்’ ஆகத் தந்துள்ளேன். ஜோதிட நம்பிக்கை உடையவர்கள் வாசிக்க வேண்டாம்.  நகைச்சுவைமேல் நம்பிக்கையுடைவர்கள் தாராளமாகத் தொடரவும்.

மேஷ ராசி மக்களே!
ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது [...]

நாயகன் எம்.என். நம்பியார்

நம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான் நடக்காது.

நம்பியார் : ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : சினம் [...]