அணுக

மின்னஞ்சல் :

writermugil@gmail.com

mugil.siva@gmail.com

Facebook

www.facebook.com/writermugil

Twitter


11 thoughts on “அணுக”

 1. அன்பின் முகில் அவர்களுக்கு வணக்கம்,

  கடந்த வாரம்தான் உங்களின் ‘யூதர்கள்’ புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

  முதலில் என் மனமார்ந்த பாராட்டுகள், உங்களின் உழைப்புக்கும் அதன் பலனாய் எழுந்த இந்த அருமையான புத்தகத்திற்காகவும்.

  சென்ற மாதம் கொச்சின் சென்றிருந்தபோது, போர்ட் கொச்சியில் அமைந்திருக்கும் சைனகோஜ் சென்றிருந்தேன். அப்போதும் யூதர்களைப் பற்றிய

  குறைந்தபட்ச அறிமுகம் கூட எனக்கிருந்திருக்கவில்லை. அங்கிருந்து திரும்பி வந்தது முதலே யூதர்களைப் பற்றி தெரிந்து கொள்ள

  முயற்சித்துக்கொண்டிருந்தேன். இணையத்திலும் பல இடங்களில் தேடியலைந்தும் எதுவுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை.

  அப்போதுதான் நண்பர் ஒருவரின் மூலம் உங்களின் புத்தகம் கிடைத்தது. எனக்கான முதல் மகிழ்ச்சி, எனக்குள் இருந்த யூதர்கள் தொடர்பான அத்தனை

  கேள்விகளுக்கும் விடை இருந்தது இந்தப் புத்தகத்தில்.. அதுவும் எளிதான நடையில்.. சுவாரஸ்யமான புதினம் படிப்பது மாதிரி.. அத்தனை சரளம்

  உங்கள் நடையில்.. ஏற்கனவே உங்கள் வலைப்பக்கத்தினைப் படித்து வந்தாலும், நான் படிக்கும் உங்களின் முதல் புத்தகம் இது.. இணையத்தில்

  உங்கள் எழுத்துக்கும் புத்தகத்தில் உங்களின் எழுத்துக்கும் ஒரு drastic change.

  ஒரே நாளில் படித்துமுடித்து விட்டேன். சிலபல தகவல்களுக்காக மீண்டும் சில முறைகள் படிக்க வேண்டும்.

  காலவரிசையாக அடுக்கிருப்பதும் தொடர்ச்சி விட்டுப்போகமல் நேரில் நின்று கதைசொல்வது மாதிரி அமைந்த நடையும் எனக்கு மிகவும் பிடித்தது.

  ஒரே ஒரு வருத்தம். இஸ்ரேலின் கொஞ்சம் பெரிய சைஸ்(மேற்குக் கரை, காஸா முதலிய பகுதிகளைக் குறிக்கும்) வரைபடமும் இணைத்திருந்தால்

  இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  அகம் புறம் அந்தப்புரத்திற்காகவும் என் வாழ்த்துகள். கூடிய விரைவில் அதனைப் படிக்கும் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்.

  நட்புடன்,
  தெ.பாலமுருகன்

 2. அன்பு முகிலுக்கு,

  வணக்கம். வாழ்த்தையும், வணக்கத்தையும் சொல்வதில் முதலாவதாக இருக்க ஆசை.
  இந்த மாதிரி கடிதங்களில் அது சாத்தியமே. உங்களது புத்தகம் “கண்ணீரும் புன்னகையும்” முழுமையாகப் படித்தேன்.

  உடனே பதில் எழுதத் தோன்றியது இதுவன்றி வேறு ஏதும் காரணமில்லை. இக்கடிதத்திற்கு. ..

  யதார்த்தமாக வளர்ந்து பூத்திருக்கும் ரோஜாவின் பனித்துளி இதழ் பார்த்து இரசித்து வரும் அக்கணத்தின் மனநிறைவு இந்நூலைப் படித்ததும் நிகழ்ந்தது.

  மூவருக்கும் தூத்துக்குடி பொதுவான இணைப்புக் களமாக இருந்ததும் ஒரு நெருக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். கதை நாயகன் இங்கு பிறந்து சில காலம் வாழ்ந்திருக்கிறார். நூலாசிரியர் இங்கு கல்வி பயின்றிருக்கிறார். நானோ பணி நிமித்தம் முப்பது ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

  உங்கள் எழுத்தின் நடை என்னை கைகோர்த்து இந்த அற்புதக் கலைஞனின் வாழ்வின் தடங்களை, தடைகளை, இறக்க ஏற்றங்களை முற்றிலுமாக அறிந்து கொள்ள வைத்தது.

  மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத, தன்னை முழுமையாகப் புரிந்து கொண்ட மாபெரும் கலைஞன் இந்த பனிமய மாதாவின் மைந்தன்.

  உண்மையான கலை நேயர்களுக்கு உன்னதமான ஒரு படைப்பின் மூலம் உலகின் சிறந்த கலைஞனைப் பற்றிய சரியான பதிவுகளை செய்தமைக்கு வருங்கால சந்ததியினர் சார்பாக எனது வாழ்த்துக்கள்.

  நன்றி.

  M.S. நரேந்திரன்,
  தூத்துக்குடி.

 3. Vanakam.
  Thangalin puthagathai padithu varukiren nandraga ullathu. enaku oru santhegam.
  neengal ezhuthum puthagathil varum kathaigal paathi karpanaiya? allathu muzhuvathum appadithaan nadanthirukuma? “Genghus khan” il varum anaithum appadiye nadantha ondra? allathu idaiyil silavatrai neengal sonthamaana karpanaiya?
  enaku theriya paduthavum.

  Nandri..

 4. Enaku கண்ணீரும் புன்னகையும் puthagam anupa mudiyuma? naan anaithu kadaikalilum thedi parthen kidaikavillai..

  Please

 5. அன்பு பிரேம்

  யூதர்கள் புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் : Dial For Books: 94459 01234, 9445 97 97 97

  நன்றி.

Leave a Comment