ஆஹா – முகலாயர்கள்!

முகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று.

முகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250.

முகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

3 Comments

 1. வாழ்த்துகள் முகில்!

  இன்னொரு குண்டு புக் (அ-பு-அபு) எப்போ? ரெண்டையும் சேர்த்து வாங்கினால் ஒரு பழங்காலத்துக் கத்தி ஃப்ரீயாமே, மெய்யாலுமா? ;)

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

 2. Mugil says:

  நன்றி சொக்கன்,
  அகம் புறம் அந்தப்புரமும் புத்தக கண்காட்சிக்கு வந்துவிடும். அந்தப் புத்தகத்தை வாங்கும் வாசகர்கள் வீடு திரும்ப குதிரை ஏற்பாடு செய்யப்படுமென பத்ரி சொல்லியிருக்கிறார். ;)

 3. ஹரி பிரசாத் says:

  வரலாறு படைக்க வாழ்த்துக்கள்!!

Leave a Reply