முகலாயர்கள் – திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது

2009 டிசம்பரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எனது முகலாயர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘இலக்கிய விருது 2009’ கிடைத்திருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2009 திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றுள்ள இன்னொரு புத்தகம், இலந்தை சு. ராமசாமி எழுதியுள்ள மகாகவி பாரதி. அவருடைய எடிசனும் ஹென்றி ஃபோர்டும் என் மனத்துக்குப் பிடித்த புத்தகங்கள். வாழ்த்துகள் இலந்தை சார்.

தமிழக அரசு விருதுகள் பெற்றுள்ள காப்பிரைட் நூல் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கும், சந்திராயன் புத்தக ஆசிரியர் சரவண கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். என்.ஹெச்.எம் ரைட்டர் + கணியன் பூங்குன்றனார் விருது புகழ் நண்பர் நாகராஜுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

8 thoughts on “முகலாயர்கள் – திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது”

 1. சபாஷ்… அடுத்து அ.பு.அந்தபுறத்துக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள்

 2. நேற்று ஒரே மூச்சில் இந்த புத்தகத்தைப் படித்தேன். விருது கொடுக்கும் அளவுக்கு சிறப்பான புத்தகம். வாழ்த்துக்கள்.

 3. அரசியல் வாடை இல்லாமல் இருக்கும் இது போன்ற
  பொது விருதுகளால் உங்களை போன்ற எழுத்தாளர்கள் பெருமை கொள்ளலாம்.
  வணக்கத்துடன் வாழ்த்துக்கள்

 4. வாழ்த்துக்கள் முகில். விருது பெற்ற நீ தான் உண்மையான இலக்கியவாதி

 5. முகில், இந்த புத்தகங்கலெல்லாம் AIRPORT BOOK STALL ல் கிடைக்க பதிப்பதகத்தாருடன் பேசவும்.

  ராஜ்மோகன்

Leave a Comment