என்னை என்ஆர்ஐ ஆக்கிய துக்ளக்!

லொள்ளு விருதுகள் 2010 – பதிவுக்கு ஏகோபித்த ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. மிகச் சிறந்த தொகுப்பு. அச்சு இதழில் முக்கியப் பக்கத்தில் இடம் பெற வேண்டியது – என்று நண்பர் பரிசல்காரன் சொல்லியிருந்தார். யாராவது எடுத்து உபயோகிப்பார்கள் என்றும் நினைத்திருந்தேன். (வாட்டர்மார்க் பயன்படுத்தவில்லை.) இந்த முறை உபயோகித்திருப்பது துக்ளக் (19.01.2011 இதழ்).

இண்டர்நெட் செய்திகள் என்று தலைப்பிட்டு ஏழு படங்களை உபயோகித்திருக்கிறார்கள். (தகவல் அளித்த நண்பர் சதிஷுக்கும், உண்மைத் தமிழனுக்கும் நன்றி). இந்தப் பக்கத்தைத் தொகுத்துள்ள எஸ்.ஜே. இதயா, அதற்குக் கொடுத்துள்ள விளக்கம்தான் செம காமெடியாக இருக்கிறது.

இந்த விருதுகள் தற்போது மெயில் வழியே பல குரூப்களில் ஃபார்வேர்ட் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதன்படி இதயாவுக்கும் கிடைத்திருக்கலாம் என்று நம்புவோமாக! 😉

துக்ளக், என்னை என்ஆர்ஐ ஆக்கிய காரணத்தினால் இந்த வருடமாவது நான் பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செய்கிறேன்.

5 thoughts on “என்னை என்ஆர்ஐ ஆக்கிய துக்ளக்!”

  1. தமிழன் என்று சொன்னால்தான் உதடுகள் ஓட்டும்:
    இந்தியன் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது

  2. ஒரு நண்பர் சொல்லி இன்றுதான் உங்கள் ப்ளாக் பார்த்தேன். எனக்கு அமெரிக்காவிலிருந்து ஃபார்வர்ட் ஆகி வந்தது அந்த மெயில். ஏற்கனவே சில என்.ஆர்.ஐ.கள் உருவாக்கிய படங்களையும் பார்த்து, பயன்படுத்தியிருந்ததால் இதுவும் அப்படியே இருக்கலாம் என யூகித்தேன். உங்கள் படைப்பு என எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. படைப்பாளியை மறைக்கும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. உங்களின் நூல்களை சமீபத்தில் கூட லாண்ட் மார்க்கில் வாங்கினேன். ராதாயணம் , லொள்ளு சபா..

  3. பரவாயில்லை இதயா. தங்கள் பதிலுக்கு நன்றி.

Leave a Comment