பாமக – நியூட்டனின் மூன்றாம் விதி!

தேர்தல் முடிவுகள் 2009 – சிறப்புத் திரைப்படங்கள்!

இந்தப் படங்கள் மெயில் வழியாக நிறைய ஃபார்வேர்ட் செய்யப்படுவதை  என்வழி வினோ வழியாக அறிந்தேன். படங்களுக்கு kollywoodtoday.com வாட்டர்மார்க் எல்லாம் சேர்த்து சேவை செய்துவரும் நண்பர்களுக்கு நன்றி.

குறளின் 134வது அதிகாரம்!

134. தேர்தல் அதிகாரம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்
கூடி இருப்பதே காங்கிரஸ்.

இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்
யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு.

திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வருண்வாயினால் சுட்ட வடு.

வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை
எம்பி எனக்கேட்ட அய்யா.

அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்
முதன்மையாய் இருப்பச் செயல்

கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண
அடுத்த அணியில் சேர்ந்துவிடல்.

தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்
மதுரையில் தோன்றாமை நன்று.

எல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு
சாதிசன ஓட்டே ஓட்டு.

ஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி
பிற்பகல் தாமே வரும்.

அனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்
பயனும் பதவியும் அது.

கட்சிகளுக்கும் உண்டோ கொள்கைதாழ்? தேர்தலில்
பகைஅணியே இடம் தரும்.

விடுகதையா பொது வாழ்க்கை? – வைகோ விரக்தி

(வைகோவின் சோகப்பாட்டு)

விடுகதையா பொது வாழ்க்கை?
விடைதருவார் இங்கு யாரோ?

எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ?
மாம்பழம் கொண்டு துரத்துவதோ?
ஏழு என்றிருந்த என் நினைப்பில்,
மூன்றுலாரி மண் விழுகிறதோ?

ஏனென்று கேட்கவும் நாதியில்ல.
ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை

பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும்
சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்?

கட்சியில் மிஞ்சியிருக்கும் கடைசி தொண்டன் கேட்டான்
நான் செய்த பாவம் என்ன?

(மிஸ்டர் பொதுஜனத்தின் எசப்பாட்டு.)

விடுகதைதான் பொது வாழ்க்கை
விடைதருவாய் இங்கு நீயே.

உனது ராஜாங்கம் இதுதானே
கூட்டணி வேண்டாம் நல்லவனே
துண்டுகள்தேடி நீ சென்றால் தொல்லைகள்தான் தூயவனே

காவிரிவேண்டி நீ நடந்தாய்
பின்பு போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்?
காவியங்கள் உனைபாடக் காத்திருக்கும்போது
காவிக்கட்சி கரம்பிடித்தால் மீண்டும் வரும் தீது
வாழ்வை நீ தேடி அங்குமிங்கும் போனால்
நாங்கள் மறந்திடுவோம்.