குறளின் 134வது அதிகாரம்!

134. தேர்தல் அதிகாரம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்
கூடி இருப்பதே காங்கிரஸ்.

இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்
யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு.

திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வருண்வாயினால் சுட்ட வடு.

வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை
எம்பி எனக்கேட்ட அய்யா.

அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்
முதன்மையாய் இருப்பச் செயல்

கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண
அடுத்த அணியில் சேர்ந்துவிடல்.

தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்
மதுரையில் தோன்றாமை நன்று.

எல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு
சாதிசன ஓட்டே ஓட்டு.

ஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி
பிற்பகல் தாமே வரும்.

அனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்
பயனும் பதவியும் அது.

கட்சிகளுக்கும் உண்டோ கொள்கைதாழ்? தேர்தலில்
பகைஅணியே இடம் தரும்.

7 thoughts on “குறளின் 134வது அதிகாரம்!”

 1. 10 குறளும் அருமை.

  வைகோ, ரித்தீஷ் பற்றிய குறளை அடுத்த அதிகாரத்தில் எதிர்பார்க்கிறேன்.

 2. வாழும் வள்ளுவரே கலக்கிப்புட்டீங்க!

  எல்லக் கு(ர)ளும் மிக அருமை.

  இடது மற்று வலது சாரிகளைப் பற்றி எதுவும் சொல்லாததனால் கண்டிப்பாக நீங்கள் அவர்களது ஆதரவாளர் தான்.

  உங்கள் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவையும்,மேற்கு வங்காளத்தையும் முதலில் கவனியுங்கள். அங்கேயே ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது.

  தீவிர மார்க்ஸிஸ்ட் வாதீயான நிங்கள் எப்படி இப்படியெல்லாம் இடது மற்றும் வலது சாரிகளுக்கு உங்களால் ஓட்டு கேட்க முடிகிறது.

  இதுவும் ஒரு யுக்தி போலும் தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு.

  தலைவர் கருணாநிதி உள்ளவரை, காங்கிரஸில் உட்கட்சி பூசல் இருக்கும் வரை, பா.ஜ.க வில் அத்வானி பிரதமர் பதவிக்கு போட்டி போடுவதை நிறுத்தும் வரை………….
  அதனால் நான் சொல்கிறேன் லாலு என்றாவது ஒருநாள் பிரதமராக வருவார் ஆட்சி அமைப்பார் இது வெங்கையா நாயுடு மேல் சத்தியம் ஆகையால் நீங்கள் எல்லோரும் யானை சின்னத்திற்கு வாக்களித்து மாயாவதியை தேந்தெடுத்து முப்படைத் தளபதியாக்குங்கள் அப்பொழுதான் மோடி பிரதமாரக முடியும் வருண்காந்தி போன்ற ஆட்கள் இந்த்துவாவை பற்றி பேச முடியும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை அழிக்க முடியும்,அப்படியும் தனி ஈழம் உருவாக்குவது கஷ்டம் இருந்தாலும் சீனா இலங்கையில் கால் ஊன்ற நினைக்கும் நினைப்பில் ம்ண்ணை வாரி போட தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது, அப்படியானால் அமெரிக்க பொருளாதார தடை விதிக்காதா என்றால் விதிக்கும் அது அமெரிக்காவுக்குத்தான் நஷ்டம்.நாங்கள் வட கொரியாவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வோம் என்கிறார்கள் சிங்களர்கள்.இன்னும் கேட்டால் மெக்ஸிகோவில் பன்றிகாய்ச்சலை பரப்பியவர்களே வடகொரியர்கள் தான் என்கிறார்கள். அதனால் வடகொரியாவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க தேய்ந்து வரும் நிலையில் சீனா பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக மே 16 அன்று தெரியும் அம்மா பிரதமராக ஆட்சியில் அமர்வார்கள் நாயுடு முதலமைச்சாராக அமரப் போகிறார் அதனால் தான் நான் சொல்கிறேன் நடிகர் கார்த்திக்கும் (அ)லட்சிய தி.மு.க T. R அவர்களுக்கு வாக்களியுங்கள் அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்கிற உங்களுடை நீண்ட நாள் கனவு மெய்ப்பட எனது வாழ்த்துக்கள்.

  கேப்டன் தலைமையில் அணிவகுப்போம்!

  வாரீர்! வந்து ஆதரவு தாரீர் என்று அன்புடன் உங்களை இரு கரம் கூப்பி காப்பி குடிக்கிறேன்.

  நன்றி வணக்கம்.

 3. அரசியலின் அகரமுதல எழுத்தெல்லாம்

  அகம் புறத்தில் உள்ளதுபடி…

 4. பிரதிபலிப்பான் கூறியது முற்றிலும் சரியே.
  அவைகளை வழி மொழிகிறேன்.

  மோடியை பிரதமராக்கி இந்திய எதிரிகளை ஒழித்துக் கட்டவேண்டும்.

 5. அருமையான குறள்கள்.. வாழும் வள்ளுவரேன்னு யார் யாரையோ கூப்பிடுறாங்க.. நிச்சயமா இந்தப் பத்துக்குறளுக்காக உங்களை வாழும் வள்ளுவரேன்னு நிச்சயம் நான் கூப்பிடுவேன். அருமை.. நீங்க இடதுகம்யூனிஸ்டா இருந்தா எனக்கென்ன, வலதா இருந்த எனக்கென்ன .. நல்ல விஷயங்களை ரசிக்க இதெல்லாம் தெரிஞ்சி என்ன செய்யப்போறோம்???

  அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.

  ஜெயக்குமார்

 6. Dear Mugil,
  neenka manusanay illai..
  aiyo i mean u r not a oridinary man..

  Neenka 100 yrs irupenkapaa…. onkalayellam onum panna mudiyathu….

Leave a Comment