விடுகதையா பொது வாழ்க்கை? – வைகோ விரக்தி

(வைகோவின் சோகப்பாட்டு)

விடுகதையா பொது வாழ்க்கை?
விடைதருவார் இங்கு யாரோ?

எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ?
மாம்பழம் கொண்டு துரத்துவதோ?
ஏழு என்றிருந்த என் நினைப்பில்,
மூன்றுலாரி மண் விழுகிறதோ?

ஏனென்று கேட்கவும் நாதியில்ல.
ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை

பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும்
சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்?

கட்சியில் மிஞ்சியிருக்கும் கடைசி தொண்டன் கேட்டான்
நான் செய்த பாவம் என்ன?

(மிஸ்டர் பொதுஜனத்தின் எசப்பாட்டு.)

விடுகதைதான் பொது வாழ்க்கை
விடைதருவாய் இங்கு நீயே.

உனது ராஜாங்கம் இதுதானே
கூட்டணி வேண்டாம் நல்லவனே
துண்டுகள்தேடி நீ சென்றால் தொல்லைகள்தான் தூயவனே

காவிரிவேண்டி நீ நடந்தாய்
பின்பு போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்?
காவியங்கள் உனைபாடக் காத்திருக்கும்போது
காவிக்கட்சி கரம்பிடித்தால் மீண்டும் வரும் தீது
வாழ்வை நீ தேடி அங்குமிங்கும் போனால்
நாங்கள் மறந்திடுவோம்.

7 Comments

 1. muthuganesh says:

  பாடல் முழுதும் அருமை.
  போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்?
  நறுக் சுருக்

 2. கலக்கல் – பேசாம நீங்க முழு நேரப் பாடலாசிரியர் ஆகிடலாம், பின்றீங்க :)

 3. surya says:

  மீண்டும் கலக்கல் பதிவு. இது நெச காமெடி.

  நட்பு வட்ட அண்ணாச்சி வை.கோவை பற்றி ஒரு காமெடி பதிவிட்டிருக்கிறார். அதையும் பார்க்கவும்.

 4. Guhan says:

  // உனது ராஜாங்கம் இதுதானே
  கூட்டணி வேண்டாம் நல்லவனே//

  thaniya ninna..yaarum voteu poda mattangale…

  super song :)

 5. வைகோ வுக்கு நீங்களாவது இருக்கீங்களே. இதை படிச்சாவளவது ஆறுதல் அடைவாரு.

  அந்த மூன்று சீட்டையும் April Fool ன்னு சொல்லிடப்போராங்க…..

 6. k.pathi says:

  CHAIR wholesale business!
  attractice discount!!
  BJP& Co.,
  chennai
  * we have 40 brand new seats for sale…lowest rate….good condition….

Leave a Reply