உங்கள் மகளுக்குப் பெயர் வேண்டுமா?

சமீபத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமிருக்கிறதுபோல. மாதம் ஒருவராவது கேட்டு விடுகிறார்கள். ‘எனக்கு மகள் பிறந்திருக்கிறா. ஏதாவது நல்ல தமிழ்ப்பெயர், அதுவும் மாடர்னா இருக்குற மாதிரி, பின்னாடி ‘இந்தப்பெயரை ஏம்ப்பா எனக்கு வைச்ச’ன்னு எம்பொண்ணு சண்டை போடாத மாதிரி இருந்தா சொல்லுங்க.’

‘இந்த எழுத்துல ஆரம்பிக்கணும்னு நியுமராலஜியோட நீங்க பெயர் கேட்டீங்கன்னா எனக்கு சொல்லத் தெரியாது. பொதுவா சில பெயர்கள் அனுப்புறேன். பிடிச்சிருந்தா எடுத்துக்கோங்க’ என்று சொல்லி சில பெயர்களை அனுப்புவேன்.

இறுதியில் அந்த நண்பர்கள் ஹ ஷ கலப்புடன் ஏதாவது ஒரு சமஸ்கிருதப் பெயரைத்தான் வைப்பார்கள், பின் என்னிடம் அசடு வழிவார்கள் என்பதும் வாடிக்கையான விஷயம். இருந்தாலும் நான் பொதுவாக நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் பெயர்ப் பட்டியலை இங்கே பகிர்ந்துகொண்டால் யாருக்காவது உபயோகப்படலாம் அல்லவா. இவை பெண்களுக்கான பெயர்கள் மட்டுமே. ஆண் பெயர்கள் யோசித்து பின் இங்கே பதிவு செய்கிறேன்.

நிறைமதி
வெண்மதி
வெண்நிலா
கவின்நிலா
கயல்
தென்றல்
மலர்
இதயா
தமிழ்நிலா
செந்தமிழ்
இனியா
அமிழ்தினி
கவி
நந்தினி
யாழினி
ஆதிரா
இலக்கியா
தமிழ்
வெண்பா
இளமதி
கண்மணி
தமயந்தி
இசை
தாரகை
தேன்மதி
தமிழிசை
முல்லை

 

(குறிப்பு : எனது மகளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் கவின்நிலா. என் சகோதரன் ஒருவன் தன் மகளுக்கு வைத்திருக்கும் பெயர் அமிழ்தினி.)

 

 

Leave a Comment