Archive for 'Uncategorized'
கந்தல்சாமி!
ஓப்பனிங் ஷாட்ல ஒரு கோபுரத்தைக் காட்டுறோம். கட் பண்ணுனா வேல். அடுத்த கட்ல தோகை விரிச்சாடுற மயில். அது திருப்போரூர் முருகன் கோயில். கட் பண்ணுனா பக்தர்களோட காவடியாட்டம். எல்லாத்தையும் மஞ்சக் கலர் டோன்ல காட்டணும். மங்களகரமா இருக்கும். கேமரா தரையோட தரையா உராசிட்டுப் போக நடந்துபோற ஒருத்தனோட கால்களைக் காண்பிக்கிறோம். அவன் ஒரு திண்டு மேல ஏறுறான். அங்க ஒரு மரம் இருக்குது. மரம் முழுக்க, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை பேப்பர்ல எழுதிக் கட்டி வைச்சிருக்காங்க. [...]
Posted: August 21st, 2009 under Uncategorized.
Comments: 14
சோனியா எஸ்கேப்பு!
அலைகடலாய் வாமவனே என்று சொல்லி
கலைஞரய்யா கட்டில்போட்டுப் படுத்துக்கொண்டார்
கொலைப்பசிடா பேமானி! கொண்டா அந்த
கொத்துக்கடலை சட்னியுடன் இட்லி என்றார்
வலை தொடங்கி நிலமெல்லாம் வாய்க்கு வந்த
வார்த்தையினால் வைததுபார் தமிழ்நாடிங்கே
தலைவலியாப் போச்சென்று தலைவர் இன்று
தலைவியுடன் தோன்றுவதை கேன்சல் செய்தார்
எலிகாப்டர் ஏறியங்கு வாரேன் என்று
எக்குத்தப்பா சொல்லிவைத்த அன்னையம்மா
கிலி பிடிச்சிப் போனதனால் கிட்டத்தட்ட
கீத்துக்கொட்டா காலியென்று புரிந்துகொண்டார்
சளிபுடிச்சிப் போச்சப்பா சனியன் இந்த
சண்டேவரை ப்ரோக்ராம்கள் டைட்டு என்று
வலியெடுத்த வேகத்தில் சொல்லிவிட்டு
வந்தவழி போனதுபார் க்ரேட் எஸ்கேப்பு.
குறிப்பு : நியூஸைக் கேள்விப்பட்டதும் குரோம்பேட்டை கவிராயர் ஜிடாக்குல தட்டுன கவித! கழுத!
Posted: May 6th, 2009 under Uncategorized.
Comments: 1
ஹிட்லரின் குழந்தை முகம்
யாரோ ஒரு குழந்தைக்கு ஹிட்லர் மீசை வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் தப்பாக நினைக்க வேண்டாம். இது ஹிட்லர் குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படம்தான். மீசை வைத்துப் பார்க்கத் தோன்றியது.
நன்றி : விக்கிமீடியா காமன்ஸ்
Posted: April 21st, 2009 under Uncategorized.
Comments: 3




