Tag Archives: வரலாறு

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு கொஞ்சம் நான்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்காக ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்று (31 மார்ச், சனி) ஒளிபரப்பாகவிருக்கும் அல்வாவின் வரலாறு, எனக்கு முதல் எபிசோட். நிகழ்ச்சி ஒவ்வொரு சனி இரவும் 8.30க்கு ஒளிபரப்பாகும். ஞாயிறு காலை 8.30க்கு மறு ஒளிபரப்பு. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

Posted in அறிவிப்பு, சரித்திரம், தொலைக்காட்சி | Also tagged , , | Comments closed

குபிலாய் கான் கூரியர் சர்வீஸ்

மாலையில் புக் செய்தால் மறுநாள் காலையில் டெலிவரி. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகளில் கூரியர் சர்வீஸ் குறித்து அதிகம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசர் குபிலாய் கானின் ராஜ்ஜியத்தில் அதி அற்புதமாக கூரியர் சர்வீஸ் நடந்துள்ளது. அது குறித்து மார்க்கோ போலோ எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து… *** குபிலாய் கானின் ராஜ்ஜியம் முப்பத்தி நான்கு மாகாணங்களைக் கொண்டது. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரங்களையும் இணைக்கும் வகையில் அற்புதமான சாலைகள் இருந்தன. சுமார் [...]

Posted in சரித்திரம், தொடர் | Also tagged , , | 1 Response

சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி!

‘மாமா, நீங்க ஏன் சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கல?’ – சில நாள்களுக்கு முன் எனது அக்காவின் ஏழு வயது மகள் கேட்டாள். ‘கெமிஸ்ட்ரி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு படிச்சதுக்கு பதிலா, நீ ஹிஸ்டரி எடுத்துப் படிச்சிருக்கலாம்.’ எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது இது. சில சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது? பள்ளி நாள்களில் வரலாறை விரும்பிப் படித்திருக்கிறேனா? நிச்சயமாக இல்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே நினைத்துப் படித்திருக்கிறேன். [...]

Posted in அனுபவம், அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் | Also tagged , , , , , | 17 Responses

டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’ ‘முப்பது ரூபாய்’ ‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967). நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ [...]

Posted in அரசியல், சரித்திரம், நகைச்சுவை, புத்தகம், மனிதர்கள் | Also tagged , , , , , , , , , , , | 7 Responses