Tag Archives: தேர்தல்

தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

மே 13 புதன்கிழமை உங்கள் முத்திரை டீவி வழங்கும் தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 6 மணிக்கு சிங்கள இசை திடீர்த் தமிழீழ ஆதரவாளர்கள் வழங்கும் ‘கர்நாடக’ இசை விருந்து காலை 7 மணிக்கு வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் மாண்புமிகு தமிழக புதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். கிளிப்பிங்ஸ்: ‘தமிழர்களே.. டாக்டர் கலைஞர் அவர்களின் மகனாக உட்கார்ந்து கேட்கி றேன். உரிமையோடு கேட்கிறேன். உணர்வோடு கேட்கிறேன். உங்களுக்காக கேட்கிறேன். கேட்க [...]

Posted in அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை | Also tagged , , , | 10 Responses

குறளின் 134வது அதிகாரம்!

134. தேர்தல் அதிகாரம். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும் கூடி இருப்பதே காங்கிரஸ். இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும் யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு. திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே வருண்வாயினால் சுட்ட வடு. வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை எம்பி எனக்கேட்ட அய்யா. அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில் முதன்மையாய் இருப்பச் செயல் கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண அடுத்த அணியில் சேர்ந்துவிடல். தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார் மதுரையில் தோன்றாமை நன்று. எல்லா ஓட்டும் [...]

Posted in அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை | Also tagged , , , , , , , , , , , , , | 7 Responses

ஆடியது காங்கிரஸ் கூடாரம்!

(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.) சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது. 1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு. ஜோத்பூரின் கடைசி மகாராஜா [...]

Posted in அரசியல், சரித்திரம், பொது | Also tagged , , , , , | 1 Response

விடுகதையா பொது வாழ்க்கை? – வைகோ விரக்தி

(வைகோவின் சோகப்பாட்டு) விடுகதையா பொது வாழ்க்கை? விடைதருவார் இங்கு யாரோ? எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ? மாம்பழம் கொண்டு துரத்துவதோ? ஏழு என்றிருந்த என் நினைப்பில், மூன்றுலாரி மண் விழுகிறதோ? ஏனென்று கேட்கவும் நாதியில்ல. ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும் சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்? கட்சியில் மிஞ்சியிருக்கும் கடைசி தொண்டன் கேட்டான் நான் செய்த பாவம் என்ன? (மிஸ்டர் பொதுஜனத்தின் எசப்பாட்டு.) விடுகதைதான் பொது வாழ்க்கை விடைதருவாய் இங்கு நீயே. [...]

Posted in அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை | Also tagged , , , , | 7 Responses

‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!

‘தேர்தல்ல எந்தக் கட்சியை நான் ஆதரிக்கேனோ அந்தக் கட்சிக்கு டெபாசிட் ‘டப்பா’சிட் ஆயிடுது. ஸோ, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தேர்தல்ல என்னோட ஆதரவு யாருக்கும் கிடையாது’ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல அறிக்கை விடப்போறாரு. அதைக் கேட்டதுக்கு அப்புறம் எல்லாக் கட்சிக்காரங்களும் பெருமூச்சு உட்டு நிம்மதியா இருப்பாங்க. ஆனா பத்திரிகைக்காரங்களுக்கு பரபரன்னு பத்திக்கிறாப்ல நியூஸ் வேணுமே, என்ன செய்யன்னு யோசிச்ச, குறுகுறு நாளிதழின் குறும்புக்கார நிருபர் ஒருவர் சில வி.ஐ.பிக்களைத் தேடி ஓடுனாரு. ‘உங்க ஆதரவு [...]

Posted in அரசியல், சினிமா, தேர்தல் 2009, நகைச்சுவை | Also tagged , , , , , , | 7 Responses