Tag Archives: கிழக்கு பாட்காஸ்ட்

தேசிய விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது. இதில் இந்த ஆண்டு, புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது என்ற பிரிவின்கீழ் எழுத்தாளர் என். ராமதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது கவனிக்கப்பட வேண்டியது. கிழக்கு, பிராடிஜி [...]

Posted in அறிவிப்பு, புத்தகம், மனிதர்கள் | Also tagged , , , , , | 6 Responses

முகலாயர்கள் – கிழக்கு பாட்காஸ்ட்

முகலாயர்கள் குறித்து கிழக்கு பாட்காஸ்ட்டில் நான் பேசியது. உடன் உரையாடுபவர் சித்ரா. கேட்க & டௌன்லோட் செய்ய

Posted in சரித்திரம், பொது | Also tagged , , | Leave a comment

தமிழக அரசு விருது

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்துக்காக எழுத்தாளர் எஸ்.எல்.வி. மூர்த்திக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. சிறு தொழில் முனைவோர் மத்தியிலும் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் இது. தொழில் முனைவோர் கையேடு புத்தகத்தை வைத்து நாங்கள் தயாரித்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியும் நல்ல கவனம் பெற்றது. மூர்த்தி சாருக்கு கிழக்கு ஆசிரியர் குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

Posted in அறிவிப்பு, புத்தகம், பொது | Also tagged , , | 2 Responses

‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள். ‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல [...]

Posted in அரசியல், அறிவிப்பு, சினிமா, மனிதர்கள் | Also tagged , , , , | Leave a comment

ஆஹா – முகலாயர்கள்!

முகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று. முகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250. முகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு [...]

Posted in அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் | Also tagged , , , , , , | 3 Responses