Tag Archives: கலைஞர்

கலைமாமணி விருதுகள் 2011

நாங்கள் மீண்டு(ம்) ஆட்சிக்கு வந்தால் 2011க்கான கலைமாமணி விருதுகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வேன் என்பதை இந்தக் கணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்பே…

Posted in அரசியல், கார்ட்டூன், நகைச்சுவை | Also tagged , , , , , | 4 Responses

ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்…

சமீபத்தில் கவர்ந்த பாடல் வரிகள். அதனோடு பொருந்திப்போகும் அரசியல் நிகழ்வுகள். வரிகள் மாற்றியும், மாற்றப்படாமலும். *** ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக் ஜிந்தாக்குதா… நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ளை இல்லை ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்லப் புள்ளை இல்லை சிபிஜ அன்புப் புள்ளை கட்சியின் கவர்ச்சிப் புள்ளை என்னோட பேரு இல்லா மீடியா நியூஸே இல்லை ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா * என்னமோ ஏதோ…   [...]

Posted in அரசியல், சினிமா, நகைச்சுவை | Also tagged , , | 5 Responses

சுஜாதாவின் கொலைகள்

சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை. * ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் [...]

Posted in அனுபவம், புத்தகம், பொது | Also tagged , , , , , | 9 Responses

கருணாநிதியிடம் ஒரு கேள்வி; கலைஞரிடம் ஒரு கேள்வி.

என்றோ வாழ்ந்துவிட்டுப் போன அரசர்களின் ஆட்சி, அரசியல் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் நேற்று வாழ்ந்துவிட்டுப்போன, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அரசியலில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய நிறையறிவு எனக்குக் கிடையாது. தெரிந்துகொள்ள பேராசை உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்காகக் (இரண்டு பாகங்கள்) காத்திருக்கிறேன். திராவிட இயக்க முக்கிய தலைவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன. பெரியாரிடம் ஒரு [...]

Posted in அரசியல், சரித்திரம், புத்தகம் | Also tagged , , , , , , , , | 5 Responses

‘கல போல வருமா!’

க்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. யாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்). தும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் [...]

Posted in அரசியல், நகைச்சுவை, புகைப்படம் | Also tagged , , , , , | 4 Responses