Tag Archives: இளையராஜா

குதிக்குற குதிக்குற குதிரைக்குட்டி…

அழகர்சாமியின் குதிரை பாடல்கள் குறித்து இணையத்தில் முதலில் வந்து விழுந்த விமரிசனங்கள் எல்லாமே எதிர்மறையாக மட்டுமே இருந்தன. ‘எந்தப்பாடலுமே இளையராஜா தரத்தில் இல்லை’, ‘இளையராஜா ஏமாற்றிவிட்டார்’ – இப்படி. அதனால் பாடல்கள் கேட்கும் ஆர்வம் எனக்கு உடனே ஏற்படவில்லை. வார இறுதியில்தான் பாடல்களைக் கேட்டேன். ஏமாந்துபோனதை உணர்ந்தேன். பாடல்களால் அல்ல, பாடல்கள் குறித்த விமரிசனங்களால். நந்தலாலாவுக்குப் பிறகு இளையராஜாவின் மிக முக்கியமான ஆல்பம். அடியே இவளே ஊருக்குள்ள திருவிழாவாம்… மிக மிக வித்தியாசமான பாடல். இந்தப் பாடலின் [...]

Posted in இசை, சினிமா, விமரிசனம் | Also tagged , , | 8 Responses

டாப் ஒன்பதரை பாடல்கள்

தற்போது ரசித்துக் கொண்டிருக்கும் இனி வெளியாகவிருக்கும் தமிழ் பட பாடல்களின் தர வரிசை. அதென்ன ஒன்பதரை? சொல்கிறேன். குறிப்பு : சமீபத்தில் வெளியான் யுவனின் இசையில் தீராத விளையாட்டு, ஜிவி இசையில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், இமான் இசையில் கச்சேரி ஆரம்பம் படங்களில் பாடல்கள் எதுவும் எனக்குப் பிடித்தமாதிரி இல்லை. ஒன்பதரை விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், கார்த்திக்கின் இதமான குரலில் ‘ஊனே உயிரே உனக்காகத் துடித்தேன், விண்ணைத் தாண்டி வருவாயா…’ – சின்னதாக ஒரு [...]

Posted in இசை, சினிமா, விமரிசனம் | Also tagged , , , , , , , , , , , , | 4 Responses

அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில். சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள். யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் [...]

Posted in இசை, சினிமா, பொது, விமரிசனம் | Also tagged , , , , , , , , , , , , , , , , , | 12 Responses

அப்பாவும் புள்ளையும் பின்ன ஹாரிஸூம்

(முன்குறிப்பு : எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. இசையை விமரிசிக்கத் தெரியாது.) சமீபத்தில் வெளியான ஐந்து புதிய படப்பாடல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் கடவுள் & நந்தலாலா (இளையராஜா). குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் & சிவா மனசுல சக்தி (யுவன்சங்கர் ராஜா). அயன் (ஹாரிஸ் ஜெயராஜ்). முதலில் நான் கடவுள். சிறிய பிட் பாடல் உள்ளிட்ட ஆறு பாடல்களையும் ஸ்கிப்  செய்யாமல் கேட்கத்தோன்றுகிறது. குறிப்பாக மதுபாலகிருஷ்ணன் பிச்சைப் பாத்திரம்  ஏந்திவந்து மனத்தைப் பிசைகிறார். ஒரு காற்றில் [...]

Posted in இசை | Also tagged , , , , , , , | 2 Responses