Tag Archives: அனகா

அனகா Vs அல்கா

மலர்களே மலர்களே பாடலை வேறு யார் பாடினாலும் கேட்கப் பிடிக்கவில்லை. எல்லாம் அனகா குரல் கொடுத்த மயக்கம். நடந்து கொண்டிருக்கும் விஜய்டீவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்கா இந்த வாரம் ‘பூ’ சம்பந்தமான சுற்றில் பாடிய பாடல் மலர்களே மலர்களே! பெருத்த ஏமாற்றம். குழந்தைகளுக்குள் ஒப்பீடு கூடாதுதான். இருந்தாலும் அனகாவின் பக்கம்கூட அல்காவால் வர இயலவில்லை. அனகா பாடியபோது பின்னணி இசை அபாரமாக இருந்ததும் பெரிய ப்ளஸ். விஜய் டீவி இசை [...]

Posted in இசை, பொது, விமரிசனம் | Also tagged , , , , , | Leave a comment

அல்கா – குட்டி சித்ரா!

நடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை. ஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியமா பாடுது.. நீயும் இருக்கியே? எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா? பாட்டுக் கத்துக்கச் [...]

Posted in இசை, பொது, விமரிசனம் | Also tagged , , , , , , , , , , | 2 Responses

என் இனிய அனகா ரசிகர்களே!

அனகா, அறிமுகம் தேவையில்லாத தேவதை. மறந்திருக்க மாட்டீர்கள்! தெரியாதவர்கள் இங்கே செல்லுங்கள். அம்ரிதா டீவி சூப்பர் ஸ்டார் ஜுனியர் சிங்கர் போட்டியில் அனகா பைனலுக்கு முந்தைய சுற்றில் வெளியேறி விட்டாள் என்று youtubeல் அறிந்து… விடுங்க விடுங்க – அழுவாச்சியா வருது. இருந்தாலும் மலர்களே மலர்களே ஒற்றைப்பாடல் போதும். வாழ்நாள் முழுவதும் அனகாவைக் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். என்னைப் போன்ற அனகா குட்டியின் தீவிர ரசிகர்களுக்காக அவள் பிரமாதமாகப் பாடிய மற்ற பாடல்களின் இணைப்பைத் தருகிறேன். அழகு [...]

Posted in இசை, பொது | Also tagged , , , | 9 Responses

அனகா என்றொரு தேவதை!

முதலில் அண்ணாச்சி முத்துகணேஷுக்கு லட்சோப லட்ச நன்றிகள். அவர்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவதாகச் சொன்னார். Youtubeல் தேடினேன். நிறைய கொட்டின. அம்ரிதா மலையாள சேனலில் வரும் ஏதோ ஒரு ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.  பத்தோடு பதினொன்று என்ற மனநிலையில்தான் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தேன். (பதிமூன்று சொச்ச வயதுள்ள) குழந்தைகள் பாடினார்கள். மலையாள சேனல் என்றாலும் தமிழ் டூயட் சுற்று, ஏ.ஆர். ரஹ்மான் சுற்று என்று தமிழ்ப்பாடல்களின் ராஜ்ஜியம்தான். பல குழந்தைக்குரல்களைக் கேட்டு ரசித்த [...]

Posted in இசை | Also tagged , | 17 Responses