Main menu:

ஊடகம்

புத்தம் புது பூமி வேண்டும்

தமிழக அரசியல் இதழில் ஏப்ரல் 16 முதல் எழுதப் போகும் புதிய தொடர். சரித்திரத்தை மாற்றிய சாகசப் பயணங்கள் குறித்த பதிவு இது.

தொடர் குறித்த அறிவிப்பு இங்கே.

அகம் புறம் அந்தப்புரம்

குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் வெளிவந்த எனது முதல் சரித்திரத் தொடர். இந்தியாவிலிருந்த முக்கிய சமஸ்தாங்களின் வரலாற்றையும் அவற்றை ஆண்டு அனுபவித்த ஜெகஜ்ஜால மகாராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையும் சொல்லியிருந்தேன். இதில் அந்தப்புர சமாச்சாரங்களும் உண்டு. அரசியலும் உண்டு.

2007 ஜுலையில் எழுத ஆரம்பித்தேன். ஏப்ரல் 2008ல் 185 அத்தியாயங்களில் நிறைவு செய்தேன். மைசூர், பரோடா, கபுர்தலா, பாட்டியாலா, குவாலியர், கூச் பிகார், காஷ்மீர், புதுக்கோட்டை, நபா உள்ளிட்ட பல முக்கிய சமஸ்தானங்களின் சரித்திரம் அடங்கியது இந்த நெடுந்தொடர்.

அகம், புறம், அந்தப்புரம் (1392 பக்கங்கள்) – புத்தகம் கிழக்கில் வெகு சிறப்பான வடிவமைப்போடும், அரிய புகைப்படங்களுடனும் வெளியாகியுள்ளது. தவிர, மைசூர் சமஸ்தானத்தின் வரலாறு மட்டும் மைசூர் மகாராஜா என்ற பெயரில் தனி புத்தகமாகக் கிடைக்கிறது.

Write a comment