நீயும் பொம்மை! நானும் பொம்மை!

பொம்மை, பலூன்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான குழந்தைகளின் தாயார்கள் இதனால் மகிழ்ச்சி அடைவர்.

– நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, (நன்றி : தினமலர்)

பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஒரு மேட்டரா? மாமூ, பொம்மை சைக்கிள் வாங்கிக்கோ. பொம்மை கார், பஸ்கூட வாங்கிக்கோ.உங்கள் பயணம் இனிதாகுக!

***

ஹலோ, என்னங்க எங்க இருக்கீங்க?

மார்க்கெட்ல இருக்கேம்மா. காய்கறி வாங்க வந்தேன்.

ஏங்க உங்களுக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு. பக்கத்துல ஏதாவது டாய்ஸ் கடை இருந்தா போங்க. அங்க மெழுகுல செஞ்ச கத்திரிக்காய், வெண்டைக்காயெல்லாம் கிடைக்கும். அதை வாங்கிட்டு வாங்க. சூப்பரா சாம்பார் செஞ்சு தர்றேன்.

***

அரிசி வாங்க முடியாத நிலையா?

பருப்பு வாங்க முடியாத விலையா?

பசியால் உங்கள் குழந்தை துடித்து அழுகிறதா?

எங்கள் இங்கிபிங்கிபாங்கி பொம்மைகளை வாங்கிக் கொடுங்கள்.

குழந்தைகள் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டே தூங்கிவிடும்.

பசியை மறக்கடிக்க

இங்கிபிங்கிபாங்கி பொம்மைகள்!


7 thoughts on “நீயும் பொம்மை! நானும் பொம்மை!”

  1. குழந்தைங்க பலூனா! இல்லை குழந்தங்கை வராம இருக்க பெரியவங்க பலூனா?

  2. அமைச்சர்கள் உருவம் உள்ள இங்கிபிங்கிபாங்கி பொம்மைகள் கிடைக்குமா, எனக்கு தெரிஞ்ச மாந்த்ரீக மந்திரவாதி மச்சா மயில்சாமி இருக்காரு அவருக்கிட்ட கொடுத்தா சூநியம் சுண்ணாம்பு எதையாவது வச்சு கை, கால் இரண்டையும் முடக்கி
    விட்டிடுவாறு , என்னதான் பட்டிங், டிங்கரிங் பார்த்தாலும் பட்ஜெட் போட பார்லிமெண்ட் இல்ல பாத்ரூம் கூட சரியா போக முடியாது haa!!! haa!!!

  3. ஆமா, அடுத்து குழ‌ந்தைக‌ளுக்கு ஓட்டுரிமை குடுத்து கை சின்ன‌த்துல‌ போட‌வைக்க‌ வேண்டிய‌துதான் பாக்கி

Leave a Comment