தேசிய விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது.

இதில் இந்த ஆண்டு, புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது என்ற பிரிவின்கீழ் எழுத்தாளர் என். ராமதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கிழக்கு, பிராடிஜி என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக இந்த தேசிய விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி. கடினமான விஷயங்களை எளிய தமிழில் எழுதுவது எப்படி என்று ராமதுரையிடம்தான் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்காக ‘அணு – அதிசயம், அற்புதம், அபாயம்’ புத்தகம் குறித்து ராமதுரை பேசினார். 50 நிமிடங்கள் அணு குறித்து இத்தனை சுவாரசியமான பேச்சை கேட்டிருக்கவே முடியாது. ராமதுரை போன்ற ஒருவர் எனக்கு பள்ளி, கல்லூரியில் அறிவியல் சொல்லிக் கொடுத்திருந்தால் அது இனித்திருக்கலாம்.

ராமதுரை பேசிய நிகழ்ச்சியைக் கேட்க & டௌன்லோட் செய்ய.

ராமதுரையின் புத்தகங்கள் வாங்க.

6 thoughts on “தேசிய விருது”

  1. நல்ல பதிவு மட்டுமல்ல. நல்ல டெம்ப்ளேட்டும்கூட. மேலே உள்ள பபிளில் ஏதேனும் எழுதி வையுங்கள். பொன் அல்லது கல்யாணி கவரிங் மொழி.

  2. எழுத்தாளர் என். ராமதுரைக்கு வாழ்த்துக்கள் !!!
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

  3. He was with Dinamani for many years. He was editing Ariviyal Mani and had written extensively in that.So dont try to give an impression as if he was new to writing on sciemce for lay public and he started this only after Kizhaku was founded.

  4. I noticed that NHM site does not even mention his earlier contributions as editor of Ariviyal Mani. What prevents you from acknowledging his earlier contributions.

  5. கிழக்கு வெளியிட்டுள்ள ராமதுரையின் புத்தகங்களின் அட்டையிலேயே நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. தளத்தில் இல்லை. சேர்த்து விடுகிறோம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

Leave a Comment