நிஜமாகவே முழு நீள…
தமிழ்ப் படம் பார்த்து விட்டு அதைச் சிலாகித்து நான்கு வரி விமரிசனமாவது எழுதாவிட்டால் ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திவிடுவார் என்பதால்…
* நிஜமாகவே ‘முழு நீள’ நகைச்சுவைத் திரைப்படம்.
* ஏ,பி,சி முதல் இஸட் வரை எல்லா சென்டர்களிலும் எடுபடும்.
* படத்தில் ஒரு சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும், அநேக நகைச்சுவை காட்சிகள் நினைத்து நினைத்து சிரிக்கும் தரத்துக்கு இருக்கின்றன.
* இரண்டு மணி நேரம், ஐந்து நிமிடங்களில் படம் முடிந்துவிடுவது பெரிய ப்ளஸ்.
* சிம்பு, டி.ஆர்., பாக்யராஜ் மூவரையும் நேரடியாக நக்கலடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
* இனி வரும் படங்களில் ஹீரோ பில்ட்-அப் காட்சிகள் வந்தால் தமிழ்ப் படம் நினைவுக்கு வந்து ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
* தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகளுக்கும் மாஸ் ஹீரோக்களுக்கும் லாடம் கட்டியிருக்கும் இயக்குநர் அமுதனுக்கு அடுத்த படம்தான் நிஜமான சவால். என்ன செய்யப் போகிறாரோ?
* 2010ன் முதல் ஹிட் தமிழ் சினிமா இதுவே. எனவே அட்வான்ஸாக இப்படி ஒரு போஸ்டர்…
* மிர்ச்சி சிவா எல்லோருடைய மனத்திலும் தாராளமாக இடம்பிடித்துவிட்டார். பார்க்கலாம், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று.
(குறிப்பு: சில வருடங்களுக்கு முன் சிவாவை கல்கிக்காக பேட்டி எடுத்தேன். அது சிவாவின் கன்னி பேட்டி. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.)
Posted: February 1st, 2010 under சினிமா, புகைப்படம், விமரிசனம்.
Tags: அமுதன், கோலிவுட், தமிழ்ப் படம், மிர்ச்சி சிவா
Comments
Comment from Shanmuganathan Renga
Time February 12, 2010 at 5:09 pm
தமிழ் சினிமாவில் எல்லா கதாநாயகனை பற்றியும் கிண்டலடித்து எடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன் அதை எல்லா தமிழ் சினிமா ஜாம்பவான்களும் அனுமதித்து ரசித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன
ஆனால் நீங்கள் சொன்னது போல் இனி வரும் படங்களில் இது போன்ற காட்சிகள் வரும் போதெல்லாம் எல்லாருக்கும் இந்த மாதிரியான நினைப்புகள்தான் வரும், இதனால் படத்தின் ரசிப்புத்தன்மை குறைந்துவிடும் என்பதை நம்மால் மருக்க முடியாது.
இயக்குநர் அமுதனுக்கு இப்படத்தை உருவாக்க கண்டிப்பாக சினனத்திரையின் தாக்கம் (லொல்லு சபா மற்றும் சூப்பர் டென்) இருந்திருக்க கூடும் என்ற என்னம் எல்லோரையும் போல எனக்கும் தோன்றுகிறது, இது சினனத்திரையில் ஒரு மணி நேர நாடகம் என்பதால் சிரித்து விட்டு மகிழலாம் ஆனால் வெள்ளித்திரையில் இதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்ருகிறது.






Comment from butterfly Surya
Time February 2, 2010 at 11:42 am
பார்த்திட வேண்டியதுதான்.