Main menu:

தமிழக அரசியலில் எனது தொடர் புத்தம் புது பூமி வேண்டும்

எனது புத்தகங்கள்

அகம் புறம் அந்தப்புரம்
முகலாயர்கள்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
செங்கிஸ்கான்

Site search

Recent Posts

Categories

நட்பு வட்டம்

Archives

site stats

RSS RSS

கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

வெயில், வியர்வை, பவர்கட், தண்ணீர்ப் பஞ்சம், மரியாதை ரிலீஸ் என ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையே தேர்தலையும் எதிர்கொள்ள நாம தெளிவாத்தான் இருக்கோமான்னு தெரிஞ்சுக்க ஒரு ‘சுய தேர்தல் பரிட்சை’ இது. பேப்பர், பேனா, இங்க் புட்டி, அடிஸ்கேல், ரப்பரு, ஜியாமெண்ட்ரி பாக்ஸ், லாக் புக், வாக்காளர் அடையாள அட்டை சகிதமா ரெடியாகிட்டீங்களா?

மத்திய அரசுப் பொதுத் தேர்வு
மொத்த மதிப்பெண்கள் : 543

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.    உங்கள் தொகுதி எம்.பி.யின் பெயர், முகம், ஆணா/ பெண்ணா இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? இருக்கிறதென்றால் அவரை கடைசியாக அவரை எப்போது எங்கு எதில் பார்த்தீர்கள்?

அ) சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றில்
ஆ) கடை திறப்பு விழா ஒன்றில், நமீதாவுக்குப் பின்னால்.
இ) நேற்று ராப்பிச்சைக்காரன் வரும் நேரத்தில் ஓட்டுகேட்டு வந்தபோது
ஈ) காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில்.

2.    உங்கள் தொகுதிக்கு எம்.பி. ஆக வேண்டுமென்றால் குறைந்த பட்சம் என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும்?

அ) உச்சந்தலையால்  உள்ளங்காலை சொறிந்துகொள்ளுமளவுக்கு வளைந்து கூழைக் கும்பிடு போடத்தெரிந்திருக்க வேண்டும்.
ஆ) குவார்ட்டர் கேப்பில் கட்சி மாறத் தெரிந்திருக்க வேண்டும்.
இ) ஐந்து வருடங்கள் வேட்டியும் அடுத்த ஐந்து வருடங்கள் சேலையும் துவைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஈ) மூன்று கோட்டிங் மேக்-அப்போடு வெள்ளித்திரையில் கதாநாயகனாகத் தோன்றி, ரசிகர்களை மிரளவோ, சிரிக்கவோ வைத்திருக்க வேண்டும்.

3.    ஓட்டு போடப் போகும்போது உங்கள் கைவிரலில் என்ன வைப்பார்கள்?

அ) மொய்
ஆ) மோதிரம்
இ) பிரியாணி
ஈ)    நாமம்

4.    பம்பரம் என்பது என்ன?

அ) யாருடைய தொப்புளிலாவது விடுவதற்கேற்ற பொருள்.
ஆ) ஓரிடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருக்கும் பொருள்.
இ) தனக்குத் தானே ஆணி அடித்துக் கொண்ட பொருள்.
ஈ)     சாட்டைக்கு கட்டுப்பட்ட பொருள்.

5.    தேர்தலில் ஓட்டுப் போட என்ன தேவை?

அ) ((1+2+3)-1)அறிவு
ஆ) சகிப்புத்தன்மை, கழிவிரக்கம்
இ) ஞாபக மறதி
ஈ)    ‘போக்குவரத்து’ வசதி

6.    அல்வா எங்கு கிடைக்கும்?

அ) லாலா கடையில்.
ஆ) தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்த இடத்தில்.
இ) பிரசாரக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் இடத்தில்.
ஈ)    வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில்.

7.    தேர்தல் கூட்டணி என்பது

அ) கட்டணப் பொதுக் கழிப்பிடம்
ஆ) தன்னலமற்ற தொண்டு நிறுவனம் போன்ற ஓர் அமைப்பு
இ) வெட்கம், மானம், சூடு, சுரணைக்குச் சம்பந்தமில்லாதது
ஈ) கோயம்பேடு மார்க்கெட்

8.    தேர்தல் வாக்குறுதி என்பது என்ன?

அ) தூக்கத்தில் பேசும் வியாதி வகையைச் சேர்ந்த ஒரு சின்ட்ரோம்.
ஆ) கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
இ) சந்தோஷமான ஒப்பாரி.
ஈ)    காமெடி ஸ்கிரிப்ட்.

9.    ஒரு வேட்பாளர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என எப்படி தெரிந்து கொள்ளலாம்?

அ) மை போட்டுப் பார்க்கலாம்.
ஆ) அவரையே கூப்பிட்டு அதட்டிக் கேட்கலாம்.
இ) தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் கேட்கலாம்.
ஈ) அவரது வேட்டியைத் துவைக்கும் வாஷிங் மெஷினிடம் கேட்கலாம்.

10. இந்திய நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?

அ) ஜிங்சாக் பவன்
ஆ) ஜன்பத் பவன்
இ) ராஜ்பவன்
ஈ) அடையாறு ஆனந்த பவன்

சரியா தவறா எனக் கூறவும்

1)    ஓட்டு மிஷின் என்பது (அது வைக்கப்படும் தொகுதியைப் பொருத்து) கட்சி சார்புடையது.
2)    தேர்தலில் நிற்க டெபாசிட் செய்த பணத்திற்கு  ‘ஏழரை’ சதவிகித வட்டி உண்டு.
3)    ஒரு கிலோ கோழித்தீவனத்தின் விலை இரண்டு ரூபாய்.
4)    வருண்காந்தி ஒரு அப்பிராணி.
5)    வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதுபோல, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சத்தியமூர்த்தி பவனில் ‘கோஷ்டி எண்ணிக்கை’ நடத்தப்படுகிறது.

சிறுகுறிப்பு வரைக :

1)    ஓட்டு வங்கி, அரசு வங்கி – வேறுபடுத்துக.
2)    சிம்புவின் அப்பா இப்போது தனது சொந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதை சாட்சியுடன் விளக்கவும்
3)    ரஜினிகாந்தின் அரசியல் தொண்டுகள்.

விரிவான விடை அளிக்கவும் :

தேர்தலில் ஓட்டுப் போட்ட பின்பு அதை நினைத்து ஃபீல் பண்ணாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

(அல்லது) தேர்தல் முடிவு வருவதற்குள் முழுப் பைத்தியமாக மாறாமல் தப்பிப்பது எப்படி? தேர்தலுக்கு பின்பும் சித்தம் கலங்காமல் வாழ்வது எப்படி?

Comments

Comment from muthuganesh
Time April 15, 2009 at 4:37 pm

ஏம்ப்பா, எனக்கு ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. நான் பர்ஸ்ட் க்ளாசுல பாசாகுவேனா?

Comment from சரவணன்
Time April 16, 2009 at 10:37 am

நானும் எதாவது பின்னூட்டம் போடலாம் யோசிச்சு என்ன எழதுறது தெரியலபா.

கேள்விகள் அனைத்தும் சூப்பர்.

Comment from nellaitamil.com
Time April 16, 2009 at 11:02 am

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி…
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு….
ஓட்டளிப்பு பட்டை…
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்….

தளமுகவரி

nellaitamil

Comment from thangaraj nagendran
Time April 16, 2009 at 2:23 pm

excellent questions
really superp

Comment from Premanandhan
Time April 16, 2009 at 5:50 pm

Coooooooooool

Comment from chinnappaiyan
Time April 16, 2009 at 8:19 pm

கேள்விகள் அனைத்தும் சூப்பர்

Comment from பிரதிபலிப்பான்
Time April 17, 2009 at 11:46 am

எல்லாக் கேள்விகளும் UPSC exam ல் வருவதைப் போல் உள்ளது.

நீங்கள் UPSC exam question paper ready பண்ணியிருக்கீங்க போல் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு கஷ்டமா கேட்க்கிறீர்கள்.

பார்த்து மக்கள் இதைப் படிச்சிட்டு ஓட்டு போடாமல் இருந்திடப் போறாங்க!

ஓட்டு போட போகிற மக்களை கஷ்டமான கேள்விக் கேட்டு தடுத்த காரணத்திற்க்காக IPS 678 under section (b&c). கேஸ் போட முடியும்.பார்த்துக்கோங்க.

Comment from Rayar from dubai
Time April 19, 2009 at 9:37 am

all qn’s are fantastic,,keep it up

Comment from Manju
Time April 24, 2009 at 10:42 am

Good Article..

Every difficult to read beacuse of the Background color.

Comment from surya
Time April 30, 2009 at 5:20 pm

இந்த பரீட்சையை சேஸ் பண்ணியாவது பாஸ் பண்ணனும்.

கும்தலக்கடி கும்மாவா..

முகிலுன்னா சும்மாவா…

Comment from RAJKUMAR
Time August 31, 2009 at 11:08 am

enna koduma sir……..?
politics jokes are cute!!!!!!!!!!!!1

Write a comment