அனகா என்றொரு தேவதை!

முதலில் அண்ணாச்சி முத்துகணேஷுக்கு லட்சோப லட்ச நன்றிகள். அவர்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவதாகச் சொன்னார். Youtubeல் தேடினேன். நிறைய கொட்டின.

அம்ரிதா மலையாள சேனலில் வரும் ஏதோ ஒரு ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.  பத்தோடு பதினொன்று என்ற மனநிலையில்தான் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தேன். (பதிமூன்று சொச்ச வயதுள்ள) குழந்தைகள் பாடினார்கள். மலையாள சேனல் என்றாலும் தமிழ் டூயட் சுற்று, ஏ.ஆர். ரஹ்மான் சுற்று என்று தமிழ்ப்பாடல்களின் ராஜ்ஜியம்தான். பல குழந்தைக்குரல்களைக் கேட்டு ரசித்த பிறகு, அந்த லிங்க்கைத் தட்டினேன்.

பெயர் அனகா. வயது 13. ஊர் கோட்டயம் என்று தெரிந்தது. அது ஏ.ஆர். ரஹ்மான்  சுற்று. அந்தக் குழந்தை தேர்ந்தெடுத்திருந்த பாடல் – மலர்களே மலர்களே – லவ்பேர்ட்ஸ்.

கேட்ட நிமிடத்திலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். காலையில் அனகாவின் குரலைக் கேட்ட பாரா, வீடியோவின் இறுதியில் கண்ணீர் சிந்திக்  கொண்டிருந்தார். மேற்கொண்டு எழுதத் தோன்றவில்லை.

நீங்களே அனுபவியுங்கள்.

http://in.youtube.com/watch?v=GOP_n6H5Uw4

அனகாவின் மலர்களே மலர்களே – வீடியோவை இறக்கிக்கொள்ள :

http://rapidshare.com/files/170408000/anakha_a_r_rahman_round.avi.html

அனகாவின் மலர்களே மலர்களே – ஆடியோவை இறக்கிக்கொள்ள :
http://rapidshare.com/files/170403997/anakha_a_r_rahman_round.mp3.html

அனகாவின் எல்லா பாடல்களையும் Youtubeல் பார்க்க, கேட்க:
http://in.youtube.com/results?search_query=anakha+amrita+tv&search_type=&aq=f

17 thoughts on “அனகா என்றொரு தேவதை!”

 1. நிசமாகவே அனகா தேவதைதான்… என்ன குரல், என்ன பாவம்? கண்ணுல தண்ணி வந்துடுச்ச்சு

  சுட்டிக்கு நன்றி முகில்.

 2. கேட்ட நிமிடத்திலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்.
  naanum thaan mugil…she is an angel…what a voice, what a grace…thanks

 3. உண்மைதான். மிகப் பரவசமான அனுபவத்தைப் பெற்றேன். நன்றி

 4. really iam n joy the song. eana voice pa avankaluku… ellarukum intha madhiri performance rasikura chance kidaikathu.. so 1000 thanks to mukil… idhuku thanks mattum illay eana venalum kodukalam…

 5. வர்ஷாவும் பெஸ்ட்தான். ஆனால் இந்தச் சுற்றைப் பொருத்தவரை அனகா எல்லோரையும்விட 😉

  Duet சுற்றில் லிபி என்ற சிறுவனுடன், அனகா ‘நறுமுகையே நறுமுகையே’ பாடியிருக்கிறாள். அதில் லிபி அசத்தியிருப்பான்.
  http://in.youtube.com/watch?v=8bUIdFnTnSc

 6. Please see the comments by Judges and Anakha starts crying with the overwhelming response. Amazing performance.

 7. அருமையான குரல் வளம். நேர்த்தியான வார்த்தை பிசகில்லாத உச்சரிப்பு .( மலையாள மொழியின் தனித்துவமே இதை போன்ற மற்ற மொழிகளோடு ஒத்து போகும் தகுதி .) எவ்விடத்திலும் குறை காண முடியாத ஒரு மேடை அரங்கேற்றம் . சமீபத்தில் ரசித்ததில் நினைவில் நிற்கும் ஒரு சிறு நிழல் . நன்றி முகில் மற்றும் பாரா.

 8. நன்றி முகில்

  இந்த பாடலை இக்குரலில் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.

  கேபிளின் மறுமொழியில் ஒருவர் கூறியிருந்தார் “இசை போதை என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன்” என்று.

  சத்தியமான வார்த்தை

Leave a Comment