கண்டேன் இயக்குநரை!

கலைஞர் டீவியிலும் உருப்படியான, பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத ஒரு நிகழ்ச்சி வருகிறது. நாளைய இயக்குநர்.

சில வாரங்களாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். டைரக்‌ஷன் கனவுகளோடு திரியும் இளைஞர்களுக்கான நல்ல களம் இந்த நிகழ்ச்சி. சில குறும்படங்கள் சப்பென்று இருந்தாலும், சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில படங்கள் ‘அட’ போட வைக்கின்றன.

மார்ச் 14, ஞாயிறு காலையில் (10.30 – 11.30) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு படம் ஓஹோ ரகம். கார்த்திக் சுப்பாராஜ் என்ற இளைஞர் இயக்கிய பெட்டிகேஸ் என்ற ஒன்பது நிமிட குறும்படம்.

போலீஸில் பெரிய ஆளாக வரவிரும்பும் ஒரு கான்ஸ்டபிளின் கதை என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் அதற்குள் பல கிளைக்கதைகள். படம் முழுக்க நகைச்சுவை. அருமையான நடிகர் தேர்வு. அற்புதமான ஷாட்கள். ஒரு ஃப்ரேம்கூட அநாவசியமாக இல்லை. ஒரு குறும்படத்தில் இத்தனை விஷயங்களைக் கொடுக்க முடியுமா என்று அசர வைத்துவிட்டார் கார்த்திக். ஒன்பது நிமிடப் படத்தில் ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த திருப்தி.

‘Karthick, You are going to become a very Big Director’ என்று நடுவராக இருந்த பிரதாப் போத்தன் சொனனார். சத்தியமான வார்த்தைகள். நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வசந்த் தனக்கே உரிய மேதமைத்தனத்தோடு பேசினார். ரசிக்க முடியவில்லை.

இதற்கு முந்தைய சுற்றுகளில், கார்த்திக் இயக்கிய பிற படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இந்நேரம் கார்த்திக்குக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பேன்.

பெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)

19 thoughts on “கண்டேன் இயக்குநரை!”

 1. கார்த்திக் சுப்பராஜின் ஏனைய குறும்படங்களை இங்கு காணலாம். http://www.youtube.com/user/karthiksubbaraj

  நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு முன்னரான இவரின் பல நல்ல குறும்படங்கள் இங்கு இருக்கின்றன.

 2. //கலைஞர் டீவியிலும் உருப்படியான, பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத ஒரு நிகழ்ச்சி வருகிறது. நாளைய இயக்குநர்.//

  மேட்டரை எழுதவருவதற்கு முன்பே கலைஞர் டிவியைப் பற்றிய விமரிசனம் எதற்கு? நீங்கள் வீட்டில் இருக்கும் நேரமே வெகு சொற்பம். இதில் கலைஞர் டிவியின் அத்தனை நிகழ்ச்சிகளையும் பார்ப்பது உங்களுக்கு சாத்தியமில்லை. அதேபோல மற்ற சானல்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்ப்பது சாத்தியமில்லை. ஆக, ஒப்பீட்டு ஆய்வு செய்வதும் உங்களுக்குத் தற்போது சாத்தியமில்லை. ஆகவே, மேம்போக்கான விமரிசனத்தை முன்வைக்கவேண்டாம். கட்டுரையில் எதைச் சொல்ல வந்தீர்களோ அதை மட்டும் சொன்னால் அழகாக இருக்கும்

 3. நானும் பார்த்தேன் முகில். அருமை. அதன் ஒளிபதிவாளர் மகேஷ் தேவ் நண்பர் தான்.

  பகிர்விற்கு நன்றி.

 4. //கலைஞர் டீவியிலும் உருப்படியான, பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத ஒரு நிகழ்ச்சி வருகிறது. நாளைய இயக்குநர்.
  As for as my knowledge goes, in DD there was a program by name “Muthal Muyarchi” and this program is a variant of it. An article covering this information in Hindu dated 24.04.2004. “We’ve been toying with the idea of doing this kind of a show for quite some time … many in the teaching faculty at the film institute are my friends and I’ve had the chance to watch the short films made there,” DD Chennai’s deputy director (programmes), U. M. Kannan. Many regular short film watchers feel sad that quality films of the genre remain unseen by the public, and the makers remain unsung. Making shorts isn’t easy. Despite the constraints of time and budget these films try to be telling. And when confined to film societies and festivals that cater for only a niche audience, their reach becomes limited. But now Doordarshan is all set to change things. Beginning May 1, “Mudhal Muyarchi,” as they have named it, will be on air every Saturday, from 3 to 3.30 p.m., on DD1 and Podhigai, followed by a repeat telecast on Sundays, on Podhigai, from 12.05 to 12.30 p.m.

  More information at http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2004042400090200.htm&date=2004/04/24/&prd=mp&

 5. # அரவிந்த்

  ///பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத/// – எந்த தமிழ் சேனலிலிருந்தும் காப்பியடிக்கவில்லை என்று நினைத்தேன். ஃபாரின் சேனலிலிருந்து காப்பியடிப்பது என்பது நம் கலாசாரம். குறை கூறல் ஆகாது 😉

  # முத்து

  ‘கலைஞரைப்’ பாராட்டினாலே பலருக்கு பிடிக்கவில்லை. உங்களுக்குமா? 😉

  # நாகராஜ்

  டிடியே அடையாளம் தொலைத்து நிற்கும்போது இப்படி ஒரு நிகழ்ச்சி வந்து போனது எப்படி நினைவில் இருக்கும்? இருந்தாலும் தாங்கள் கொடுத்த லின்க்குக்கு நன்றி 😉

  # இன்று ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி பற்றி அறிந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். குறும்படம் தயாரிக்க பட்ஜெட் எவ்வளவு ஒதுக்கிறார்கள் என்று கேட்டேன். வெறும் ஐயாயிரம்தானாம். ஆனால் ஐம்பதாயிரம் வரைக்கும் கைக்காசு போட்டு படத்தை ‘Rich’ ஆக எடுக்கச் சொல்வார்களாம். தவிர ஏகப்பட்ட கெடுபிடிகளாம். கதை அவருக்குப் பிடிக்கவேண்டும், இவரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நச்சரிப்புகளும் அதிகமாம். டான்ஸ் மாஸ்டரின் சிஷ்யர்களுக்கு மட்டும் தனி மரியாதை கிடைக்கிறதாம்.

  வளரட்டும்.

 6. Iam Rajamani (B.Sc-Agriculture) from Pondicherry. I like very much this show. Sir i need some information about this. Because one of my best friend is more intrested for film making. so i request you to give the information for, how to apply this programme, what are the qualifications are required etc., Iam waiting for your informations. Thanking you,

 7. நானும் பல வாரங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன், இந்நிகழ்ச்சி (10.30 – 11.30) ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் சண் டீவியில் இராமயணம் ஒளிபரப்பாகும் எங்கள் வீட்டில் இராமனுக்குதான் முதலிடம் ஷண்முகத்திற்கு அல்ல, இதற்காகவே பக்கத்து ஆண்டி வீட்டிற்கு போய் பார்த்துவிட்டு வருவேன் அவர்களுக்கும் பிடித்துவிட்டது, ஆனால் இப்போதெல்லாம் எங்கள் வீட்டிலேயும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான். மேலும் கோகுல் நாத்தின் எல்லா கதைகளும் வித்தியாசமாகவே இருக்கும், அனைவருக்கும் தெரிந்திருக்கும் கோகுல் நாத் கலக்கப்போவது யாரில் வித்தியாசமாக கலக்கி , மானாட மயில் ஆட-வில் வெற்றி பெற்று இப்போது நாளைய இயக்குநரிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்னை மிகவும் கவர்ந்தவரில் முக்கியமானவர் , இவர் கதையை பார்த்த judge aiyya மதன் ”you are big talent man, நீ எந்த துரையில் நுலைங்சாலும் அதுல பெஸ்ட்டா பன்னனுங்குற தன்னம்பிக்கை பிடிச்சிருக்கு, கமல் கூட தன்னை இப்படித்தா வளர்த்துக்கிட்டாரு ” இது கோகுல் ஒரு எறும்ப வச்சி சூப்பரா ஒரு சிரு கதை சொன்னப்ப மதன் சொன்னது

 8. karthik is my brother’s son.he has fire in him.he writes effective new wave poems in tamil.we are very proud of him.your comments are inspiration to him indeed.we are coins moved by the time.congrats for his success.

 9. நல்ல படம். சினிமா, டிவி பார்க்காத என்னையும் தேடிப் பார்க்கவைத்துவிட்ட அறிமுகக் கட்டுரையும்கூட – பாராட்டுகள் முகில்!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 10. கார்த்திக்சுப்புராஜ் ஒரு சிறந்த படைப்பாளி.
  உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்…….

 11. நான் குறும்படங்களை பொருத்தவரை கார்த்திக்சுப்புராஜின் “ரசிகன்”. புத்தகங்களை பொருத்தவரை முகிலின் “ரசிகன்”.
  இருவரை பற்றியும் சொல்ல ஒரு தலம் தந்த முகிலுக்கு நன்றி.

Leave a Comment