முகலாயர்கள் – கிழக்கு பாட்காஸ்ட்

முகலாயர்கள் குறித்து கிழக்கு பாட்காஸ்ட்டில் நான் பேசியது. உடன் உரையாடுபவர் சித்ரா.

கேட்க & டௌன்லோட் செய்ய

Because…

‘நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?’

‘……’

‘தயங்காம சொல்லு.’

‘……’

‘உனக்கு இந்த சப்ஜெக்ட் புதுசுல்ல. ப்ரொகிராமிங் எல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும். போகப்போக ஈஸியா இருக்கும்.’

அருகில் உட்கார்ந்தான். அனிச்சையாக நகர்ந்துகொண்டாள். சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ப்ரொகிராம் சரியான விடையைக் கொடுத்தது. ஆனால் அவளிடமிருந்த பயமும் அவன் மீதான தயக்கமும் விடைபெறவில்லை.

*

‘ஏன் அழற?’

‘நான் வீட்டுக்குப் போகணும்.’

‘கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாம் சரியாகிரும்.’

‘எனக்கு இந்தப் படிப்பு பிடிக்கல. இந்த காலேஜ் பிடிக்கல. ஹாஸ்டல் பிடிக்கல. இந்த ஊர் பிடிக்கல. எதுவுமே பிடிக்கல.’

‘நான் உன் ஃப்ரெண்ட்தானே. என்னையும் பிடிக்கலையா?’

‘தெரியல…’

ஆனால் அவள் பார்வை அப்படிச் சொல்லவில்லை.

*

‘லீவுக்கு ஊருக்குப் போறியா?’

‘ம். என்னை பஸ் ஏத்திவிட வருவியா?’

‘ம்.’

‘நான் ஊர்ல இருக்கறப்போ போன் பண்ணுவியா? ப்ளீஸ்…’

*

‘உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா, இல்லையா?’

‘எல்லாரும் தப்பா பேசறாங்க…’

‘நாம என்னைக்கும் ஃப்ரெண்ட்ஸ். நீ தப்பா நினைக்கலையே?’

‘ம்ஹூம்…’

‘அதுபோதும்.’

‘ப்ளீஸ், கொஞ்ச நாள் பேசாம இருக்கலாமே.’

அவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

*

‘இன்னிக்கு எக்ஸாம் எப்படி எழுதின?’

‘நீ ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னேல்ல. நல்லா எழுதினேன். நீ?’

‘இப்படியே நம்ம சேர்ந்து படிச்சா எல்லா எக்ஸாமும் நல்லா எழுதுவேன்னு நினைக்கிறேன்டா. ப்ளீஸ்டா…’

*

‘ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே. சொல்லுடி.’

‘இப்போ வேண்டாம்.’

‘எப்போ சொல்லுவ?’

‘அப்புறமா. மூட் இருக்கறப்போ.’

‘எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். யாரவன்?’

‘……’

‘என்கிட்டயே மறைக்கிற பார்த்தியா. ப்ளீஸ் சொல்லுடா.’

‘யூஜி படிக்கறப்போ எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. அவனுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. இப்போ இல்ல. ப்ளீஸ் இதுக்கு மேல கேக்காதே.’

*

‘நீ கவிதை எழுதுவேல்ல.’

‘தோணுனா எழுதுவேன்.’

‘ஏன் என்னைப் பத்தி ஒரு கவிதைகூட எழுதல?’

‘தோணலை.’

‘பொய் சொல்லாத.’

‘தோணுறதையெல்லாம் எழுத முடியாது.’

*

‘நீ பேசி இன்னியோட எட்டு நாள் ஆச்சு.’

‘……’

‘சொல்லு. ஏன் இப்படி இருக்குற?’

‘தெரில.’

‘எதுனாலும் மனசைத் தொறந்து சொல்லு. நீ ஏன் என்கிட்டயே இப்படி நடந்துக்குற?’

‘……’

‘உன் பர்த்டேக்கு நான் கொடுத்த கிஃப்டை ஏன் வாங்கிக்கல? நீ சொல்லியே ஆகணும்.’

‘ப்ளீஸ், எனக்கு பூ வாங்கித் தாயேன்.’

*

‘காலேஜ்ல நாம சேர்ந்துபோகப்போற ஒரே டூர் இதுதான்.’

‘என்னால வர முடியாது.’

‘ப்ளீஸ், நீ வந்தே ஆகணும்.’

‘மாட்டேன்.’

‘சரி, வேண்டாம். என்ன காரணம்னு சொல்லு.’

‘முடியாது.’

‘அடம்பிடிக்காத. நீ சொல்லலேன்னா விட மாட்டேன்.’

‘எனக்காக ஒண்ணே ஒண்ணு செய்வியா?’

‘சொல்லு.’

‘என்னை விட்டு எங்கேயாவது போயிரு.’

‘ஏன்?’

‘Because, i love you…’

நிஜமாகவே முழு நீள…

தமிழ்ப் படம் பார்த்து விட்டு அதைச் சிலாகித்து நான்கு வரி விமரிசனமாவது எழுதாவிட்டால் ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திவிடுவார் என்பதால்…

* நிஜமாகவே ‘முழு நீள’ நகைச்சுவைத் திரைப்படம்.

* ஏ,பி,சி முதல் இஸட் வரை எல்லா சென்டர்களிலும் எடுபடும்.

* படத்தில் ஒரு சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும், அநேக நகைச்சுவை காட்சிகள் நினைத்து நினைத்து சிரிக்கும் தரத்துக்கு இருக்கின்றன.

* இரண்டு மணி நேரம், ஐந்து நிமிடங்களில் படம் முடிந்துவிடுவது பெரிய ப்ளஸ்.

* சிம்பு, டி.ஆர்., பாக்யராஜ் மூவரையும் நேரடியாக நக்கலடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

* இனி வரும் படங்களில் ஹீரோ பில்ட்-அப் காட்சிகள் வந்தால் தமிழ்ப் படம் நினைவுக்கு வந்து ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகளுக்கும் மாஸ் ஹீரோக்களுக்கும் லாடம் கட்டியிருக்கும் இயக்குநர் அமுதனுக்கு அடுத்த படம்தான் நிஜமான சவால். என்ன செய்யப் போகிறாரோ?

* 2010ன் முதல் ஹிட் தமிழ் சினிமா இதுவே. எனவே அட்வான்ஸாக இப்படி ஒரு போஸ்டர்…

* மிர்ச்சி சிவா எல்லோருடைய மனத்திலும் தாராளமாக இடம்பிடித்துவிட்டார். பார்க்கலாம், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று.

(குறிப்பு: சில வருடங்களுக்கு முன் சிவாவை கல்கிக்காக பேட்டி எடுத்தேன். அது சிவாவின் கன்னி பேட்டி. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.)