முகில் / MUGIL

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 21, 2013
இன்று  புத்தகக் கண்காட்சி காற்று வாங்கும் என்று எதிர்பார்த்து போன எனக்கு  அதிர்ச்சி. மாலை 6 மணிக்குமேல் ஓரளவு நல்ல கூட்டம். கடைகளில் வியாபாரமும்  ஓகே. நாளைக்கும் இதே அளவு கூட்டத்தை எதிர்பார்க்கலாம். புதன் – அன்று கடைசி  தினம் என்பதால் சொல்லவே தேவை இல்லை.

நாளை மதியம் 2 மணிபோல சென்றுவிட்டால், புத்தகங்களைத் தேடி வாங்க வசதியாக இருக்கும் என்று திட்டமிட்டுள்ளேன்.

திருமகள் நிலையத்துக்கு பாலகுமாரன் வந்திருந்தார். ஏற்கெனவே வாங்க  நினைத்திருந்த ‘என்னைச் சுற்றி சில நடனங்கள்’ புத்தகம் வாங்கி, அவரிடம்  கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். நான் பாலகுமாரனை வார இதழ்களில்  வாசித்துள்ளேன். அதிகம் வாசித்ததில்லை. மேற்சொன்ன புத்தகம் அவரது  கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் வாங்கினேன். ஒரு வகையில் இது அவரது  ஆட்டோபயாகிராபி என்றுகூட சொல்லலாம்.

நண்பர் ஆர். முத்துக்குமார் வித்தியாசமான ஒரு புத்தகத்தை  வாங்கியிருந்தார். என்ன பதிப்பகம், ஆசிரியர் பெயர் எல்லாம் நினைவில்  நிற்கவில்லை. ஆனால், புத்தகத்தின் பெயர் என்றைக்கும் மறக்காது – ‘பெரிய  புடுங்கி’. ஒரு பத்திரிகையாளரின் அனுபவ நூல் இது. (Karunakaran Perumal கவனத்துக்கு.)

பத்ரியைச் சந்தித்தேன். நேற்றைய கிழக்கு ஹிட் லிஸ்ட்டில் வாத்யார்  சுஜாதாவும் இணைந்திருந்தார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஓஹோ. சாருவின் ஜீரோ  டிகிரியும் டாப் டென்னில் வரக்கூடும் என்று சொன்னார்.

பெரிகாம்  (ஸ்டால் எண் 585, 586) என்ற கடையில் மூன்று நூல்கள் கவனம் ஈர்த்தன.  வாருங்கள் வீடு கட்டலாம், கம்பி வளைப்போர் கையேடு, கொத்தனார் கையேடு.  மூன்றையும் எழுதிய ஆசிரியர் டாக்டர் என்.வி. அருணாசலம். யாருக்காவது  பயன்படும் என்பதால் இங்கே இந்தத் தகவல்.

புக் வேர்ல்ட் லைப்ரரி  என்ற ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் – இந்த முறை இரண்டு வரிசைகள் ஸ்டால்கள்  அமைத்துள்ளார்கள். எல்லாம் பிற நாடுகளில் இருந்து கண்டெய்னர்களில் மொத்தமாக  வரும் புத்தகங்கள். இங்கே உள்ள புத்தகக் கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை.  பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட், காஃபி டேபிள் வகையறா புத்தங்கள். பல நல்ல,  சுவாரசியமான, அரிய புத்தகங்கள் உள்ளன. ஸ்டால் எண் : 108, 436-437

திருத்தம் : தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளுக்கு கழிவு இல்லை என்று நேற்று  எழுதியிருந்தேன். மன்னிக்கவும். 10 சதவிகிதம் கொடுக்கிறார்கள்.

கேண்டீன் குறிப்பு : எதுவுமில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 20, 2013
இன்று புத்தகக் கண்காட்சியில் உச்சபட்ச கூட்டம். சென்ற மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்குக் குவிந்த ரசிகர்களைவிட, இன்று திரண்ட வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். காலை முதலே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது. கண்காட்சி அரங்கில் நடு வரிசையில் உள்ள அரங்குகளுக்குள் நுழைய முடியவில்லை – காற்றில்லாமல் மூச்சு திணறியது. பபாஸியின் அருமையான அரங்கு கட்டமைப்புக்கு வாசகர்களின் சார்பில் கோடானு கோடி நன்றி.

பலரும் நடக்க முடியாமல் ஆங்காங்கே அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள் பலர், பாலூட்ட – உணவூட்ட தகுந்த இட வசதியின்றி தவித்ததைக் காண முடிந்தது. 750 அரங்குகளை அமைப்பவர்கள், வயதானவர்கள் – தாய்மார்கள் சற்று ஓய்வெடுக்கத் தகுந்த சிறு அறைகளை அடுத்த முறையாவது அமைத்துக் கொடுத்தால் புண்ணியம்.

இன்று கண்காட்சியில் நண்பர்கள் பலரை நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தேன். சொக்கனை மிஸ் செய்துவிட்டேன். நாளை சந்திக்க வேண்டும்.

கிழக்கில் ஆர். முத்துக்குமாரின் தமிழக அரசியல் வரலாறு இரண்டு தொகுதிகளும் நன்றாக விற்பனை ஆயின. மருதனின் (சே-யின்) மோட்டார் சைக்கிள் டயரியும் டாப் கியரில் விற்பனை ஆனது.

கிழக்கு ஸ்டாலை கடந்த ஓர் இளைஞன், தன்னுடன் வந்த இளைஞனிடம் அடித்த கமெண்ட் காதில் விழுந்தது. ‘ச்சே… இதையெல்லாம் போய் புக்கா கொண்டு வந்திருக்காங்க பாரு… படமே இப்போ அப்போன்னு இழுத்துக்கிட்டு இருக்குது…’ – அந்த இளைஞன் குறிப்பிட்டுச் சொன்னது இரா. முருகனின் விஸ்வரூபம் நாவலை.

தினத்தந்தியும் வழக்கம்போல வரலாற்றுச் சுவடுகளுக்கென தனி ஸ்டால் அமைத்துள்ளது. அங்கே விற்பனை டல். காரணம் இரண்டு வருடத்துக்கு முன்பு ரூ. 300க்குக் கிடைத்த சுவடுகளின் தற்போதைய விலை ரூ. 500. கழிவு கிடையாது.

வரலாற்றுச் சுவடுகளை மட்டும் சொல்ல முடியாது. காகித விலையேற்றம் முதற்கொண்டு பல காரணங்களால் எல்லா புத்தகங்களுமே கடந்த வருடத்தை விட 20லிருந்து 30 சதவிகிதம் வரை விலையேற்றம் கண்டுள்ளன. உதாரணம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சென்ற ஆண்டு ரூ. 500, தற்போது ரூ. 650.

சிக்ஸ்த்சென்ஸில் வெளியாகியிருக்கும் எனது புதிய புத்தகமான வெளிச்சத்தின் நிறம் கருப்பு, நன்றாக விற்பதாக பதிப்பாளர் புகழேந்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கோபிநாத்தின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க-வின் ஆங்கிலப் பதிப்பு புத்தகக் கண்காட்சியில் வெளியாகி 2000 பிரதிகளைத் தாண்டிவிட்டதாகத் தகவல் சொன்னார். என் சைஸுக்கு ஒரு கோட் வாங்கி மாட்டிக் கொண்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து முகம் காட்ட வேண்டும் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். சிக்ஸ்த் சென்ஸில் பலரும் விசாரித்துச் செல்லும் சுபவீயின்  ‘ஈழம் தமிழகம் நான்’ புத்தகம் நாளை மாலை முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தியா பதிப்பகத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு (வரலாற்று) நூல்களை இந்த ஆண்டும் கொண்டு வந்துள்ளார்கள். யுவான் சுவாங் (மூன்று தொகுதிகள்) வாங்க வேண்டும்.

இன்று சில புத்தகங்களை மட்டும் வாங்கினேன். வாங்கிய புத்தகங்களை பிறகு மொத்தமாகப் பட்டியலிடுகிறேன்.

கேண்டீன் குறிப்பு :

ஒரு டெல்லி அப்பளம் ரூ. 30, ஒரு கப் சோளத்தின் விலையும் அதே. அதிகம்தான். கேண்டீனில், அரங்கில் கிடைக்கும் காபியின் சுவை சரியில்லை. இரவு ஏழு மணிபோலஅரங்கின் வெளியே ஆறு ரூபாய்க்கு ஓர் இளைஞர் சைக்கிளில் வந்து சுக்கு காபி விற்கிறார். அபார ருசி.

முக்கியக் குறிப்பு:

புத்தகக் கண்காட்சி ஞாயிறே கடைசி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 23, புதன் வரை கண்காட்சி உண்டு. அடுத்த மூன்று நாள்கள் அவ்வளவாக கூட்டம் இராது. தேடித் தேடி புத்தகம் வாங்குபவர்கள் தாராளமாக வரலாம்.

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 19, 2013
பொங்கல் விடுமுறை முடிந்தும் இன்னமும் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த வருடம் புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCAவுக்கு மாற்றப்பட்டிருப்பதுகூட பலர் அறியாத விஷயம். விளம்பரங்கள் போதவே போதாது.

அப்படியே தப்பித் தவறி அறிந்தவர்கள் YMCA மைதானத்தை அடைந்து, பின் உள்ளே ரெண்டு கிலோ மீட்டர் நாக்கு தள்ள நடந்து வந்தால் மட்டுமே, புத்தகக் கண்காட்சிக்கான டிக்கெட் கௌண்டரை அடையலாம். வாகனங்களில் வந்தால் பார்க்கிங் செய்வதற்குள் மூட்-அவுட் ஆகிவிடுகிறது.

டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலமா, அல்லது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று வயோதிக அன்பர்கள் யோசிப்பது உறுதி. இந்த முறை 750 ஸ்டால்கள். எக்ஸ்ட்ரா வரிசைகள். இத்தனைக் கடைகளைப் பார்த்தே தீர வேண்டுமா என்று மலைப்பு ஏற்படுவதும் நிச்சயம். அதுவும் குறுகலான நடைபாதையில், நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் புகுந்து புத்தகத்தை வாங்கித்தான் தீர வேண்டுமா என்ற சலிப்பு கண்டிப்பாக ஏற்படும். பாதையில் நடக்கும்போது கவனமாக நடந்தாலே ஓரிரு முறை தடுக்கிவிழும் அதிர்ஷ்ட சம்பவங்களும் நடக்கும். ஆக, இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு துன்பியல் சம்பவமாகத்தான் நிகழ்ந்து வருகிறது.

ஆனால், பபாஸியின் (தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்) இத்தனைச் சதிகளையும் மீறி, இன்றைக்கு வாசகர்கள் குவிந்துவிட்டார்கள். கடந்த எட்டு நாள்கள் வியாபாரமே இன்றி தவித்த கடைக்காரர்கள் முகத்தில் இன்றைக்கு கொஞ்சூண்டு புன்னகை.

இன்றைக்கு நான் சில கடைகளுக்கு மட்டுமே சென்று பார்த்தேன். புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. கடைசி மூன்று நாள்கள் புத்தகங்கள் வாங்க வேண்டும்.

சில கடைக்காரர்கள், வாசகர்களைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவிக் கூவி கடைக்குள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். யாரையும் கூவி அழைக்கக்கூடாது என்பது பபாஸியின் விதி. இந்த முறை அது கிடையாதுபோல.

கடந்த நாள்களில், முதல் மூன்று வரிசைகளில் மட்டுமே கூட்டம் நிறைந்திருந்ததாகவும், மற்ற வரிசைகளுக்கு வர இயலாமல் வாசகர்கள் களைப்படைந்து விட்டதாகவும் பலர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு எல்லா வரிசையிலும் கூட்டம் ஓஹோ. நாளை இதைவிட அதிகமாக கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

‘ஃபோர் ஸ்டால் என்ற விஷயத்தைத் தூக்கிவிட்டு, த்ரீ ஸ்டால்கள் அமைத்திருப்பது பெரிய மைனஸ்.  கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு, வாடகை மூலம் அதிக வருமானம் பார்ப்பதே பபாஸியின் ஒரே நோக்கம். அதனால் புத்தக விற்பனை பாதிப்பது குறித்து அவர்களுக்கு கவலையே கிடையாது. கேட்டால், ‘இருக்குற இடத்துல புத்தகம் வித்துக்கிறது அவனவன் திறமை’ என்று பதில் சொல்கிறார்கள்’ என வருத்தப்பட்டார் பதிப்பக நண்பர் ஒருவர்.

விகடனில் – வட்டியும் முதலும், கிழக்கில் – பிரபல கொலை வழக்குகள் ஆகிய புத்தகங்கள் நம்பர் ஒன் ஸ்நானத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சிக்ஸ்த் சென்ஸில் வெளியாகியுள்ள எனது ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அப்பதிப்பக நண்பர் பாண்டியன் சொன்னார். அங்கே புதிய பதிப்பாக வெளியாகியுள்ள சந்திரபாபு புத்தகத்தை 40+ வயதுடையவர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றதைக் கண்டேன். சந்திரபாபு மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார் என்பதில் எனக்கு திருப்தி.

நாளை மதியம் முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். நிறைய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.

அகம் புறம் அந்தப்புரம் – புதிய பதிப்பு

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்
சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.

வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்

விலை ரூ. 200.

அறிவிப்பு 2 : ரஜினி

ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.

விலை : ரூ. 275

வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்

மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு

2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.

வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்

பக்கங்கள் : 200

விலை : ரூ. 125

அறிவிப்பு 5 : அண்டார்டிகா

‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு

சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.

மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.

கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.

ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

லொள்ளு அவார்ட்ஸ் 2012
2012ன் பெரும்பான்மையான பொழுதுகளை இருளில் கழித்த, வருகின்ற ஆண்டிலும் இருளில் வாழப் போகிற தமிழக மக்களாகிய நமக்கு இந்த விருதை நாமே சமர்ப்பித்துக் கொள்வோம்.

மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதே மத்திய அரசின் தலையாய கடமையாகி விட்டது. இதே போன்ற அற்புதமான பொருளாதார நிலை தொடர்ந்தால், வருங்காலம் ஓஹோ! ஆக, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்களாகிய நமக்கு கீழ்கண்ட விருது சமர்ப்பணம்!

பேஸ்புக் ஒழிக!
கொசு  விரட்டிகளென ஆயிரத்தெட்டு ப்ராடெக்டுகள் சந்தையில் கிடைக்கின்றன.  அதற்கெல்லாம் கொசு அடங்குகிறதா இல்லையா என்பது விடை தெரியா கேள்வி. இந்த  தலைமுறை கொசுக்கள், ஒழிப்பான்களை எல்லாம் ஏமாற்றும் வித்தை தெரிந்தவை  என்பதே என் எண்ணம்.

இருந்தாலும் கொசு அடிக்கும் பேட் – ரட்சகராகத்தான் தெரிகிறது. அதைக் கொண்டு கொசுவைக் கொல்வதில் ஒரு குரூர திருப்தி கிடைக்கிறது.

ஒரு கொசுவுக்கு ஒரு ரன் என்று கணக்கு வைத்துக் கொண்டால்கூட, நாமெல்லாம்  கொசு பேட் மூலம் அடித்த ரன்களை, சச்சின்கூட நெருங்க முடியாதுதான்.

சங்ககாலத்தில் எம் பெண்கள் முறம் கொண்டு புலி விரட்டினர். இக்காலத்தில்  நம் பெண்கள் பேட் கொண்டு கொசு அழித்தனர் என்று நெஞ்சை நிமிர்த்தி  பெருமைப்பட முடிகிறது.

ஒரு நாளைக்கு நாலைந்து கொசுக்கள் பேட்டில்  சிக்கினாலே, வீட்டிலுள்ள கொசுவை எல்லாம் அடித்துக் கொன்றுவிட்டோம் என மனம்  நிறைவு கொள்கிறது. அந்த நினைப்பிலேயே, சந்தோஷத்திலேயே நன்றாகத் தூங்க  முடிகிறது. அச்சமயத்தில் கொசு என்ன, குளவியே கடித்தாலும் தெரிவதில்லை.

‘சிகரெட்டை பிடிக்கறதை தயவுசெஞ்சு  நிறுத்துங்க’ன்னு தலீவர் மார்கழி மாசத்துல சொல்லிருக்கக்கூடாதோ?! தலீவர்  இப்படி சொல்லிட்டாரேங்கிற டென்ஷன்ல எக்ஸ்ட்ராவா தம் அடிக்காம இருந்தா சரி. #  மார்கழி சிந்தனை 483.

21 டிசம்பர், 2012…

இப்படியே செத்துச் செத்து விளையாடுவதே இந்த  பூமிக்கு வேலையாப் போச்சுது. நாளைக்கும் இன்னொரு தபா உலகம் அழியப்  போவுதாம். அடப்போங்கப்பு, போய்புள்ளகுட்டிகளை படிக்க வைங்க!

அடியேய்… நாளைக்கு ஒலகம் அழியறத சன் டீவில லைவா காட்டுறாகளாம்!

அய்யோ.. அதைப் பாக்கணும்னா இந்த கரண்டு சனியன் இருந்து தொலையாதே!

பவர் ஸ்டாரின் பவர்ஃபுல் காமெடியில் உருவாகியுள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா  படத்தைக் காண்பதற்கு முன்பாகவே உலகம் அழிந்துவிடுமோ என்பது மட்டுமே  என்னுடைய ஒரே கவலை!

நண்பர்கள், வாசகர்கள் கவனத்துக்கு :

இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டு முக்கிய மாற்றங்கள்.

ஜனவரி 4 முதல் 16 வரை என்று முதலில் அறிவித்திருந்தார்கள். இப்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை புத்தகக் கண்காட்சி.

நடைபெறும் இடம் : நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்.

கடந்த ஆறு வருடங்களாக பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது. அங்கே மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெறுவதால் இந்த இடமாற்றம்.

தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக முக்கியமான பின் குறிப்பு : புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்க  அம்மா வரலாம் என்று தகவல். ஆக, முதல்நாள் யாரும் சென்று அவதிப்பட வேண்டாம்.

பேஸ்புக் எனக்கெதிராகச் சதி செய்கிறது. வலைத்தளம் பக்கமே என்னை வர விடுவதில்லை. நான் எதை எழுத நினைத்தாலும், அதைத் தன் மீதே எழுத வைத்து விடுகிறது. அதனால்தான் வலைத்தளத்தில் என்னால் எழுத முடியாமல் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட சுயநலத்தோடும் ஆணவத்தோடும் இயங்கிக் கொண்டிருக்கும் பேஸ்புக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என் கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பேஸ்புக்கில் சமீபத்தில் எழுதிய சில ஸ்டேட்டஸ்களை இங்கே பதிந்திருக்கிறேன்.

பேஸ்புக் அராஜகம் ஒழிக!

அரைவேக்காடு!
பொதிகையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்…

அதிலும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி Live-ஆக ஒளிபரப்பு…

குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த பெரியம்மா கேமராவுக்கு பழக்கமில்லாதவர்  போல. கேமராவின் திசையைத் தவிர மற்ற திசைகளில் எல்லாம் பார்த்து பேசிக்  கொண்டிருந்தார். அவ்வப்போது ‘நான் பேசுறது, செய்யறது சரியா?’ என்பது போல  எதிரிலிருப்பவர்களிடம் பார்வையால் பேசிக் கொண்டார்.

கைகள்  மட்டுமல்ல, பேசப்பேச அவருக்கு குரலும் நடுங்கியது. ஆனால் என்ன, அவர் சொன்ன  சமையல் குறிப்புகள் அனைத்துமே புதுமையானவை. விநாயகருக்கு உகந்ததாகக்  கருதப்படும் விளாம்பழத்தைக் கொண்டு ஏகப்பட்ட விஷயங்கள் சொன்னார். விளாம்பழ  பஞ்சாமிர்தம், விளாம்பழ ரசம், விலாம்பழ துவையல்… இப்படி. பெரியம்மாதான்  தடுமாறுகிறார் என்றால், கேமராமேன் அதற்குமேல். பல பழங்கள் கலந்த கூழ்போன்ற  பஞ்சாமிர்தத்தில் விளாம்பழம் தனியாகத் தெரியுமளவுக்கு டைட்-குளோஸப்பில்  காட்டி படுத்தினார்.

ஒரு கட்டத்தில் பெரியம்மாவுக்கு தொண்டை வற்றி  விட்டது. பேச்சு வரவில்லை. அடப்போங்கப்பா என அருகிலிருந்த பாட்டிலை  எடுத்து மடக் மடக்  என தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தச்  சமயத்தில் கேமராமேன் தட்டுத்தடுமாறி அருகிலிருந்த பிள்ளையார் சிலையின்  தொப்பையை நோக்கி கேமராவைத் திருப்பிக் கொண்டார்.

சில நொடிகள்  கழித்து பெரியம்மா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘கம்பு’ குறித்த சமையல்  குறிப்புகளைப் பேச ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே தடுமாற்றம். பேச வந்தது  மறந்துவிட்டது. ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வரும் என்று ஆசையாகக்  காத்திருந்தேன். விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.

நாலைந்து  விளம்பரங்களுக்குப் பிறகு மீண்டு வந்த பெரியம்மா, கம்பு குறித்த சமையல்  குறிப்புகளை வேக வேகமாக ஒப்பிக்க ஆரம்பித்தார். (இருந்தாலும் அவையெல்லாமே  மிக அருமையான குறிப்புகள்.) அதன்பின் பிள்ளையாருக்குப் பிரசாதமாக வேறு  என்னவெல்லாம் படைக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஏகப்பட்ட  பதார்த்தங்களை தன் வீட்டிலேயே தயாரித்து, வண்ண வண்ண டப்பர்வேர்களில்  நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். Live-விலும் ஏதோ ஒன்று செய்து காட்ட  வேண்டுமல்லவா. அதனால் கடைசியாக, தேங்காய்ப்பூ கலந்த அரிசிமாவுக்  கொழுக்கட்டை செய்ய ஆரம்பித்தார். மாவை உருண்டையாகப் பிடித்து, இட்லித்  தட்டில் வைத்து குக்கருக்குள் வேக வைத்தார்.

பெரியம்மா பேசுவதற்கு  வேறு ஒன்றும் இல்லை. நிகழ்ச்சியை முடிக்க வேண்டியதுதான். ஆனால் ஏதாவது  பேசித்தான் ஆகவேண்டும். ‘கொழுக்கட்ட வேக பத்து நிமிஷம் ஆகும்’ என்றார்  கொஞ்சம் டென்ஷனாக. ‘ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்’ என்று எதிர்முனையில்  இருந்து சொல்லியிருப்பார்கள் போல.

‘விநாயகரை வழிபட இப்படியெல்லாம்  நிறைய செஞ்சு வழிபடணும்னு இல்ல. ரெண்டு பழம், வெல்லம் வைச்சுகூட  வழிபடலாம்’ என்றார் அப்பாவியாக. மேற்கொண்டு ஏதேதோ சொல்ல முயற்சி செய்தார்.

‘வணக்கம்’ சொல்லச் சொல்லிவிட்டார்கள் போல. சொல்லி விடைபெற்றார்.

அச்சமயத்தில் கொழுக்கட்டை, அரைவேக்காடாகத்தான் இருந்திருக்கும் – பொதிகை போல.

கூடங்குளம்

நீங்க டைரக்டரா?
என்னைச் சந்திக்க வரும் சினிமா நண்பர்களுக்கு எங்கள் அபார்ட்மெண்ட் பூங்கா பிடித்தமான ஓரிடம். ஒருமுறை அங்கே அமர்ந்து பேசும் நண்பர்கள், மறுமுறை வரும்போதும் பூங்காவில் பேசுவதைத்தான் விரும்புவார்கள். நிறைய மரங்கள். சறுக்கு, ஊஞ்சல், சீஸா உள்ளிட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள். நடைபாதை. உட்கார்ந்து பேச சிமெண்ட் பெஞ்சுகள். சாலையை ஒட்டி அமைந்திருந்தாலும் பேசுவதற்கு ஏற்ற அமைதியும் நிழலும் எப்போதும் நிலவும்.

பொதுவாக இயக்குநர்களுடன், உதவி இயக்குநர்களுடன் பூங்காவில் பேசுவது வழக்கம். எனவே அங்கே விளையாடும் குழந்தைகள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இரு தினங்களுக்கு முன்பு நண்பரும், சினிமா நடிகருமான ஒருவருடன் பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகள் சைக்கிளில் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டுக் கொண்டார்கள். இன்று ஓர் அவசர வேலையாக பூங்காவைக் கடக்கும்போது அந்தக் குழந்தைகள் கண்கள் நிறைய கேள்விகளுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அந்த உரையாடல்…

‘அங்கிள் அன்னிக்கு நீங்க பார்க்ல யார்கூட பேசிக்கிட்டிருந்தீங்க?’

‘ம்… அவர் ஒரு நடிகர்.’

‘ஓ… நான் அவரை சினிமால பார்த்திருக்கேன்.’

‘அவர் உங்க ஃப்ரெண்டா?’

‘ஆமா.’

‘உங்களுக்கு சினிமால நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டா?’

‘கொஞ்ச பேரு.’

‘சூர்யா உங்க ஃப்ரெண்டா?’

‘ம்ஹூம்.’

‘கார்த்தி?’

‘எனக்கு சிவகுமாரைத்தான் தெரியும்.’

‘வேற யாரு உங்க ஃப்ரெண்ட்?’

சில நண்பர்களின் பெயரைச் சொன்னேன். குழந்தைகள் எதிர்பார்த்த பெயர்கள் இல்லைபோல. அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவினார்கள்.

‘நீங்க சினிமால இருக்கீங்களா?’

‘ஆமா?’

‘டைரக்டரா?’

‘இல்ல.’

‘புரொடியூசரா?’

‘ம்ஹூம்.’

‘இல்ல.’

‘அப்போ என்னதான் பண்றீங்க?’

‘ரைட்டர்.’

‘எல்லாரையும் இண்டர்வியூ பண்ணுவீங்க. கரெக்டா?’

‘இல்ல. இது வேற.’

‘புரியல. அதை விடுங்க. எப்போ சூர்யாவை ஃப்ரெண்டு பிடிப்பீங்க?’

இதற்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. ‘ஃப்ரெண்ட் ஆன உடனே சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

மேலுள்ள வரியோடு இந்தப் பதிவை முடித்தால், முற்றுப்பெறாததுபோல் தெரியும் என்பதால் கூடுதலாக இந்த வரியையும் சேர்த்துக் கொள்கிறேன் முற்றுப்புள்ளி